லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்

Published On 2017-10-07 07:05 GMT   |   Update On 2017-10-07 07:05 GMT
குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெங்காய தாள் - 2 கொத்து,
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்,
கேரட் - 1
பீன்ஸ் - 10
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்.

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 6,
பூண்டு - 4 பல்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

வெங்காய தாளில் உள்ள வெங்காயத்தை தனியே எடுத்து பொடியாக நறுக்குங்கள்.

பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காய தாளையும் பொடியாக நறுக்குங்கள்.

மிளகாயை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, உரித்த பூண்டுடன் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர் சாதம், சோயா சாஸ்கள், உப்பு, வெங்காய தாள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறுங்கள்.

சூப்பரான ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News