லைஃப்ஸ்டைல்

அருமையான சைடிஷ் மலபார் முட்டை தொக்கு

Published On 2017-09-19 07:35 GMT   |   Update On 2017-09-19 07:35 GMT
புலாவ், பிரியாணி, சாம்பார் சாதம், சாதத்திற்கு இந்த மலபார் முட்டை தொக்கு அருமையாக இருக்கும். இந்த இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முட்டை - 3,
சின்ன வெங்காயம் - 15,
காய்ந்த மிளகாய் - 10,
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - அரை டீஸ்பூன்.



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை உப்பு போட்டு வேகவைத்து ஓட்டை எடுத்து விட்டு முட்டையில் கீறல் போட்டு கொள்ளவும்.

வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் அரைத்த மசாலாவை சேர்த்து சுருள வதக்குங்கள்.

அடுத்து அதில் முட்டையை சேர்த்து கிளறுங்கள்.

மசாலா முட்டையில் நன்றாக சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.

சூப்பரான மலபார் முட்டை தொக்கு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News