லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான ரொட்டி ஜாலா

Published On 2017-09-09 09:50 GMT   |   Update On 2017-09-09 09:50 GMT
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக முறையில் செய்து குடித்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ரொட்டி ஜாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 2 கப்,
முட்டை - ஒன்று (முட்டை தவிர்த்தும் செய்யலாம்),
தேங்காய்ப்பால் - அரை கப்,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
நெய் - தேவைக் கேற்ப,
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்.



செய்முறை :

முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

மிக்சியில் மைதா மாவை போட்டு அதனுடன் தேங்காய் பால் மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, அடித்து வைத்துள்ள முட்டை சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு அடிக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை வடிகட்டி கொள்ளவும்.

மாவு கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.

சிறிய தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஓட்டை போட்டு அந்த பாட்டிலில் கரைத்திருக்கும் மாவை ஊற்றி நன்கு மூடவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பாட்டிலில் உள்ள மாவை தோசை அளவுக்கு மாவைச் சுற்றினால் கோடு கோடாக விழும் (ஓட்டையிலிருந்து திரி திரியாக மாவு விழும். அதைச் சுற்றி சுற்றி ஊற்றிவிட்டு அதன்மேல் அந்தக் கோடுகள் இணையும்படி பூப்போல ஊற்றவும்). மேலே சிறிது நெய் தடவி, மிதமான தீயில் அடி சிவக்காமல் மடித்து சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான ரொட்டி ஜாலா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News