லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் பன்னீர் மஞ்சூரியன்

Published On 2017-09-01 09:52 GMT   |   Update On 2017-09-01 09:52 GMT
சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் மஞ்சூரியன். இன்று இந்த மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்
சோள மாவு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
இஞ்சி - அரை அங்குலம்
பூண்டு - 10 பல்
தக்காளி சாஸ் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
பச்சைமிளகாய் - 3



செய்முறை :

வெங்காயம், குடைமிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பன்னீருடன் சோள மாவு, உப்பு, மிளகுத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த பன்னீரை போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

தேவையான உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக வறுத்த பன்னீரை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார்.

குறிப்பு:

பன்னீருக்கு தேவையான அளவு உப்பை முதலிலேயே சேர்த்து உள்ளதால் காய்களுக்கு தேவையான உப்பு மட்டும் சேர்க்கவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News