லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சத்தான கேரட் கட்லெட்

Published On 2017-09-01 07:26 GMT   |   Update On 2017-09-01 07:26 GMT
குழந்தைகள் அடிக்கடி கேரட்டை சாப்பிடுவது நல்லது. இன்று கேரட்டை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்கக்லாம்.
தேவையான பொருட்கள் :
 
கேரட் - 300 கிராம்
வெங்காயம் - ஒன்று பெரியது
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
ஆளிவிதை (ஃப்ளாக் சீட்ஸ் ) - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.



செய்முறை :

கேரட்டை தோல் சீவி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்.

ஆளிவிதையை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் மிளகுத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

இதில் மசித்து வைத்துள்ள கேரட்டைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மசாலாவை கட்லெட் வடிவத்தில் பிடித்து, ஆளிவிதை பொடியில் இரு பக்கமும் நன்றாகப் புரட்டி எடுக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் காய வைத்து சிறிது நெய் ஊற்றி, சூடானதும் கட்லெட்டுகளை போட்டு இருபுறமும் பொன்னிறம் ஆகும் வரை வேகவைத்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சூப்பரான கேரட் கட்லெட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News