search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரட்"

    • விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர்.
    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    விதவிதமான உணவுகள் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகள் பல உள்ளன. அவற்றில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது  குறித்து இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட்- 3

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    சர்க்கரை- 250 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பால் பவுடர்- 100 கிராம்

    மெலன் சீட்ஸ்- ஒரு ஸ்பூன்

    நெய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.

    பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் லட்டுக்களாக உருட்டி எடுத்து பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    • வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    நள்ளிரவில் வழக்கம் போல விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது. வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அதேபோல் வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.90-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    தக்காளி-ரூ.15, நாசிக் வெங்காயம்-ரூ.20-ரூ.25வரை, ஆந்திரா வெங்காயம்-ரூ.12-ரூ.15வரை, சின்ன வெங்காயம்-ரூ.20-ரூ.40வரை, உருளைக்கிழங்கு-ரூ.22, உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, வரி கத்தரிக்காய்-ரூ.15, அவரைக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.25, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ70, மாலூர் கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, முட்டை கோஸ்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.80, பீர்க்கங்காய்-25, வெள்ளரிக்காய்-ரூ.15, புடலங்காய்-ரூ.15, காராமணி-ரூ.15, முள்ளங்கி-ரூ15, சவ்சவ்-ரூ.10, நூக்கல்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15, குடை மிளகாய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.25,பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.20, இஞ்சி-ரூ.90.

    • 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இன்று 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.

    ஊட்டி கேரட், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து உள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. தக்காளி ரூ40-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் மற்றும் இஞ்சி கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    • தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலைகாய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.

    எனவே விவசாயிகள் கேரட்டை முன்கூட்டியே அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று, பின்னர் மூட்டைகளில் நிரப்பி, காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.அங்கு உள்ள காய்கறி மண்டிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரட் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் ரூ.13 முதல் ரூ.20வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.18 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது. கேரட் கொள்முதல்விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால், அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.

    • வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.

    குதிரையின் சக்தியை 'ஹார்ஸ் பவர்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய சக்தி மனிதனுக்கும் கிடைக்க வேண்டுமானால் கொள்ளு துவையலும், கேரட் பச்சடியும் சாப்பிடுவது நல்லது.

    வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கேரட் மிக நல்ல உணவாகும். கேரட்டை பச்சடியாக மட்டுமல்லாமல், ஜூஸாகவோ, அல்வா செய்தோ வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம்.

    கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். கேரட்டை துருவி உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எக்சிமா என்று சொல்லக்கூடிய தோல் நோய் குணமாகும்.

    டோகோகிளின் என்ற ஹார்மோன் கேரட்டில் உள்ளது. இது இன்சுலினை போன்றது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.

    -மரிய பெல்சின்

    • தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அரவேணு

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக கேரட், உள்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து விவசாயி கள் கேரட்டை அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று கழுவி, அதனை மூட்டைகளில் நிரப்பி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட கேரட் கிலோவு க்கு ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.45 ரூபாய் முதல் ரூ.60 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது.

    கொள்முதல் விலை வீழ்ச்சியடை ந்துள்ளதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாவிட்டாலும், லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
    • கோயம்பேடு மார்கெட்டில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் மாலூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரட் விற்பனைக்கு வருகிறது. தினசரி 10 லாரிகளில் 80 முதல் 100 டன் அளவுக்கு கேரட் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் கோயம்பேடு மார்கெட்டில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ஊட்டி கேரட் ரூ.35-க்கும், மாலூர் கேரட் ஒரு கிலோ ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

    ஆனால் அதையும் வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனை ஆகாமல் கேரட் மூட்டை, மூட்டையாக தேங்கி வருகிறது.

    இதைத்தொடர்ந்து கேரட்டுகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினமும் 10 டன் கேரட் மூட்டை, மூட்டையாக குப்பையில் வீணாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து கேரட் மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, வரத்து அதிகரிப்பால் கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் கடந்த சில நாட்களாகவே அதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.

    மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேக்கமடைந்து கிடக்கும் கேரட் மறுநாளே அழுகி வீணாகி விடுகிறது. இதனால் தினசரி 10டன் அளவிலான கேரட் குப்பையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றிய பகுதி கிராம பகுதிகளில் அதில்பேரிகை, அத்தி முகம், காமன் தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம், காட்டு நாயக்கன தொட்டி, உலகம், மேலுமலை, காளிங்காவரம், உத்தனப்பள்ளி, மேடுபள்ளி, கொல்லப்பள்ளி, கும்பளம், மற்றும் பல பகுதிகளில் கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.

    • மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து.
    • கிலோ ரூ.4க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்தலார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிளில் மாற்றுப் பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேராக்காய், உகு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக, 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, 30 டன் அளவுக்குத்தான் விற்பனைக்கு வருகின்றன.

    உறைபனி விழுவதால் மலை காய்கறிகளை பாதுகாக்க காலை நேரங்களில், 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. உறைபனி தாக்கத்தால் முட்டைகோஸ் பயிர் நிறம் மாறியுள்ளது.

    முட்டைகோசுக்கு நல்லவிலை கிடைத்து வந்தநிலையில் தற்போது அதன் விலை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் படிப்படியாக விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டு தற்போது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் விட்டுவிடும் நிலை காணப்படுகிறது

    ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டியில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட் உள்பட பல்வேறு மலைகாய்கறிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    தற்போது பிற மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. நேற்று ஊட்டி மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ 4 ரூபாய்க்கு தான் விற்பனையானது.

    15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும். பீட்ரூட், கேரட் விலையும் இதுபோன்று குறைந்து தான் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. மேலும் சேலம், ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, கொளத்தூர், வீரபாண்டி, தாரமங்கலம், காடையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தினசரி சந்தைகள் உள்ளன.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆகிறது. இதே போல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த சந்தைகளுக்கு ஊட்டி, ஓசூர், கொடைக்கானல், கர்நாடகா உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து தினமும் கேரட் லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக கேரட் லோடு வரத்து சரிந்துள்ளது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம், திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக அன்றாட சமையல், ஜூஸ், அல்வா உள்ளிட்டவைகளுக்கு கேரட் பயன்படுத்துவதால் அதன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களில் கேரட் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    உழவர் சந்தைகளில் கடந்த ஜூலை மாதம் கிலோ 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்ற முதல் ரக ஊட்டி கேரட் ஆகஸ்டு மாதம் 80 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் 120 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற சந்தைகள், சில்லரை காய்கறி கடைகளில் இதை விட அதிக விலைக்கு கேரட் விற்கப்படுகிறது.

    • சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • சேலம் மார்க்கெட்டுகளுக்கு கேரட், பீன்ஸ்வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கேரட் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனைாயாகிறது. இதே போல பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தை களுக்கும் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டஙகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் உள்பட ஏராளமானமானோர் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கேரட், பீன்ஸ்வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கேரட் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனைாயாகிறது. இதே போல பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மற்ற காய்கறிகளின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு-

    தக்காளி பழம் ஒரு கிலோ ரூ.25, உருளை கிழங்கு ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.26, பெரிய வெங்காயம் ரூ. 24, பச்சை மிளகாய் ரூ.36, கத்திரி ரூ.30, வெண்டைக்காய் ரூ.24, முருங்கைக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, சுரக்காய் 15, புடலங்காய் 26, பாகற்காய் 46, தேங்காய் 25, முள்ளங்கி ரூ.36, அவரை ரூ.55 ரூபாய்க்கும் கீரைகள் ஒரு கட்டு ரூ.16, பப்பாளி ரூ.25, கொய்யா ரூ.30, சப்போட்டா 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    • கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன.

    தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது,இன்னும் ஓரிரு வாரங்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை காரணமாக மலைகாய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோ ஒன்று ரூ.90 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதே கொள்முதல் விலை நீடித்தால் கேரட் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×