லைஃப்ஸ்டைல்

தித்திப்பான பிரெட் - தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

Published On 2017-08-22 09:51 GMT   |   Update On 2017-08-22 09:51 GMT
பிரெட், தேங்காய் வைத்து பர்ஃபி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த பர்ஃபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெள்ளை பிரெட் தூள் - 2 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
பால் - ஒரு கப்,
முந்திரித் துண்டுகள் - தேவையான அளவு,
ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) - 2 சொட்டு,
நெய் - தேவையான அளவு.



செய்முறை :

பிரெட் தூளை வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய் துருவல், சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

இந்த கலைவையை கைவிடாமல் கிளற வேண்டும். கலவை சிறிது கெட்டியானவுடன் பாலில் ஊற வைத்த பிரெட் தூளை சேர்த்துக் மீண்டும் நன்றாக கிளறவும்.

இந்த கலவை திக்கான பதம் வந்தவுடன் முந்திரித் துண்டுகள், எசன்ஸ் சேர்த்து... நெய் தடவிய தட்டில் கொட்டி சமன் படுத்தவும்.

இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து, துண்டுகள் போடவும் (ஃப்ரீசரில் வைக்க வேண்டாம்).

பிரெட் - தேங்காய் பர்ஃபி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News