லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான பிங்கர் ஃபிஷ்

Published On 2017-08-12 07:29 GMT   |   Update On 2017-08-12 07:29 GMT
அனைவருக்கும் விருப்பமான பிங்கர் ஃபிஷை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் பிங்கர் ஃபிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சோள மாவு - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
சீரக தூள் - கால் ஸ்பூன்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
முட்டை - ஒன்று
பிரட் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



செய்முறை :

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து விரல் நீள துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தனியா தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்த பின் கடைசியாக முட்டை சேர்த்து ஒரளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து இந்த கலவையில் மீனை மாவில் முக்கி ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News