லைஃப்ஸ்டைல்

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வழிகள்

Published On 2018-04-21 05:42 GMT   |   Update On 2018-04-21 05:42 GMT
உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே.
உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க 'ஃபேஸ் பேக்' யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. அதற்கான சில யோசனைகளை பார்க்கலாம்.

"கோடைக்காலத்தில், சருமத்தைப் பாதுகாக்க இரண்டு வகையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். சருமத்தின் பராமரிப்புக்காக கொடுக்கப்படவேண்டிய வெளிப்புறப் பாதுகாப்பு (External Care), மற்றொன்று, உடல் குளுமைக்காக கொடுக்கப்படவேண்டிய உடலின் உள்புற பாதுகாப்பு (Internal Care).

* உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அடர் நிறங்களைத் தவிர்த்துவிட்டு பச்சை, மஞ்சள், நீலம் போன்ற மங்கலான நிறமுள்ள உடைகளை மட்டுமே அணிய வேண்டும். உடைகள் உடலை இறுக்காதபடி இருக்கவேண்டியது அவசியம். கோடையில் பருத்தி உடைகள்தான் பெஸ்ட்.! இவை அனைத்தும் உள்ளாடைகளுக்கும் பொருந்தும்.

* குளிர்ந்த நீரில், தினமும் மூன்று முறை முகம் கழுவ வேண்டும். அதேபோல காலை, மாலை என இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

* மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே வந்தே ஆக வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள், உடலில் வெயில்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயை தேய்த்துக்கொள்ளலாம். எண்ணெய்ப் பசை உள்ள சருமம் (Oily Skin) உள்ளவர்கள், குளிர்ந்த நீரால் தோலை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ளவும்.
Tags:    

Similar News