லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பச்சைப்பயிறு இட்லி

Published On 2018-02-23 04:43 GMT   |   Update On 2018-02-23 04:43 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பச்சைப்பயிறை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயிறை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சை பயிறு - 1 கப்,
உளுந்து - அரை கப்,
புழுங்கலரிசி - 1 கப்,
வெந்தயம் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
கெட்டியான தயிர் - அரை கப்



செய்முறை :

பச்சை பயிறு, உளுந்து, அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி தனித்தனியே 2 மணி ஊற விடவும்.

நன்றாக ஊறியதம அதனை மிக்சியில் தனித்தனியாக போட்டு நன்றாக அரைத்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.

அல்லது புளித்த தயிர் சேர்க்கவும்.

இந்த மாவை இட்டி தட்டில் ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான பச்சைப்பயிறு இட்லி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News