லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான அவல் - கேரட் கிச்சடி

Published On 2018-01-17 06:38 GMT   |   Update On 2018-01-17 06:38 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் அவலை சேர்த்து கொள்வது நல்லது. இன்று அவல், கேரட்டை வைத்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கெட்டி அவல் - 1 கப், 
உப்பு - தேவைக்கு, 
வெங்காயம் - 1
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, 
புளிக்கரைசல் - 1/4 கப், 
கேரட் - 2 
கொத்தமல்லி - சிறிதளவு.

தாளிக்க... 

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், 
கடுகு - 1 டீஸ்பூன், 
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், 
கறிவேப்பிலை - 1 கொத்து, 
வரமிளகாய் - 2, 
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.



செய்முறை

கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலை சுத்தம் செய்து சிறிது தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீரை பிழிந்து விட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கேரட் துருவல் போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் புளிக்கரைசல் ஊற்றி அத்துடன் மேலும் 1 கப் நீர் விட்டு உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்ததும் கழுவி வைத்துள்ள அவலை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

அவல் சீக்கிரம் வெந்துவிடும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான அவல் - கேரட் கிச்சடி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News