லைஃப்ஸ்டைல்

உடலுக்கு வலுசேர்க்கும் கார்ன் - ப்ரோக்கோலி சூப்

Published On 2017-12-21 05:31 GMT   |   Update On 2017-12-21 05:31 GMT
உடலில் சக்தி இல்லாமல் இருக்கும் பெண்கள், இந்த சூப்பை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம். இந்த சூப்பை எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கைப்பிடி, 
தக்காளி - 1, 
இஞ்சித் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், 
ப்ரோக்கோலி - 12 பூக்கள், 
[பாட்டி மசாலா] மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், 
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
பால், ஃபிரெஷ் கிரீம், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: 

ஸ்வீட் கார்னை வேக வைத்து பாதியை மட்டும் எடுத்து மசித்து கொள்ளவும். மீதி பாதியை தனியாக வைக்கவும்.

தக்காளி, ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய தக்காளி, ப்ரோக்கோலி, இஞ்சித் துருவல், மசித்த ஸ்வீட்கார்ன் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். 

அனைத்து சற்று வதங்கியதும் மூன்று டம்ளர் நீர் விட்டு, கொதிக்க விடவும். 

உப்பு சேர்த்து, ப்ரோக்கோலி வெந்ததும், வேகவைத்த சோள முத்துக்கள், பால் சேர்த்துக் கலக்கி, ஓரு கொதி வந்ததும் இறக்கவும். 

பரிமாறுவதற்கு முன்பு [பாட்டி மசாலா] மிளகுத் தூள், விருப்பபட்டால் ஃபிரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

சூப்பரான கார்ன் - ப்ரோக்கோலி சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News