லைஃப்ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த மாதுளை - கேரட் சாலட்

Published On 2017-12-18 03:19 GMT   |   Update On 2017-12-18 03:19 GMT
நீரழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த மாதுளை - கேரட் சாலட் மிகவும் நல்லது. இந்த இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

முளைக்கட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், 
வெங்காயம் - ஒன்று, 
தக்காளி - ஒன்று, 
கேரட் துருவல் - கால் கப், 
மாதுளை முத்துக்கள் - கால் கப், 
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கு, 
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கு.



செய்முறை : 

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பச்சைப் பயறுடன் வெங்காயம், தக்காளி, கேரட், மாதுளை முத்துக்கள், உப்பு, எலுமிச்சைச்சாறு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து கலந்து காலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம். 

சூப்பரான மாதுளை - கேரட் சாலட் ரெடி.

குறிப்பு : முளைக்கட்டிய பயறை வேக வைத்தும் சேர்க்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News