search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carrot Salad"

    ப்ரோக்கோலி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ப்ரோக்கோலி - 100 கிராம்
    கேரட் - 50 கிராம்
    பெங்களூர் தக்காளி - 1
    பெரிய வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    மிளகுத் தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    ப்ரோக்கோலியை தண்டுடன் நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    நறுக்கிய ப்ரோக்கோலியை ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய ப்ரோக்கோலி, கேரட், தக்காளி, பெரிய வெங்காயம், போதுமான உப்பு, மிளகுத்தூளை சேர்த்து நன்றாக பிரட்டவும்.

    கடைசியாக அதில் எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து காய்கறிகள் மீது தூவினால் சுவையான ப்ரோக்கோலி சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு முட்டை கோஸ் - 1 கப்
    குடை மிளகாய் - அரை கப்
    கேரட் - 2
    பூண்டு - 2 பல்
    ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
    மிளகு தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், சிவப்பு முட்டை கோஸ், குடை மிளகாயை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டை கோஸ், குடை மிளகாய், கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சிவப்பு முட்டை கோஸ் - கேரட் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட் - கேரட் சாலட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாலட்டில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்  :

    துருவிய பீட்ரூட் - 1/2 கப்
    துருவிய கேரட் - ½ கப்
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    ஊறவைத்த நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்
    மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்
    இந்துப்பு - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய் போட்டு கிளறவும்.

    பின்னர் அதில் நிலக்கடலை போட்டு கிளறவும்.

    மேலும், இதில் மிளகு தூள், இந்துப்பு போட்டு கலக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் செய்யப்படும் கோசுமல்லி என்கிற கோசும்பரி உடல் நலத்திற்கும் உகந்தது.
    கோசுமல்லி அல்லது "கோசும்பரி" என்று அழைக்கப்படும் இது தென்னிந்திய திருமணம், விசேஷ விருந்துகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஊறவைத்த பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் பரிமாறுவார்கள்.

    செய்வது மிகவும் சுலபம். உடல் நலத்திற்கும் உகந்தது. இதை காரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் செய்வார்கள். எல்லாக் காய்களையும் சேர்த்தோ அல்லது ஒரே காயை பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விருந்துகளில், கேரட் கோசுமல்லிதான் இடம் பெறும்.

    தேவையானப்பொருட்கள் :

    கேரட் (நடுத்தர அளவு) - 2
    பயத்தம் பருப்பு - 1/2 கப்
    பச்சை மாங்காய் (துருவியது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பச்சை கொத்துமல்லி தழை - சிறிது
    தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்னீரில் ஊற வைக்கவும்.

    கேரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மெல்லிய சிறு துண்டுகளாக் (தீக்குச்சி போல்) நறுக்கிக் கொள்ளவும்.

    கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விடவும். (விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).

    ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துண்டுகள், உப்பு போட்டுக் கலக்கவும்.

    தாளிக்கும் கரண்டி அல்லது ஒரு சிறு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கேரட் கலவையில் கொட்டவும்.

    ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, கேரட்டுடன் சேர்க்கவும்.

    அத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×