லைஃப்ஸ்டைல்

உடலுக்கு வலுவான காளான் - தக்காளி சூப்

Published On 2017-12-12 04:45 GMT   |   Update On 2017-12-12 04:45 GMT
தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று காளான், தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

காளான் - 100 கிராம் 
தண்ணீர் - 1/2 லிட்டர் 
தக்காளி - 2 
வெள்ளை மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 2 ஸ்பூன் 
வெண்ணெய் - 2 ஸ்பூன் 
சோளமாவு - 1 டீஸ்பூன் 
பால் -1 கப்



செய்முறை : 

தக்காளியை வேக வைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

பாலை கொதிக்க வைத்து தனியாக வைக்கவும்.

காளானை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு வேக வைக்கவும்.

காளான் நன்றாக வெந்தவுடன் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து கொதிக்க விடவும். 

கொதித்தவுடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, வெண்ணெய், கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசல் ஊற்றி கொதிக்க வைக்கவும். 

இறுதியாக பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

சூப்பரான காளான் - தக்காளி சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News