லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் கருப்பு அரிசி ரொட்டி

Published On 2017-11-24 05:31 GMT   |   Update On 2017-11-24 05:32 GMT
டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்களுக்கு மிகவும் சத்தான கருப்பு அரிசி. இன்று கருப்பு அரிசியில் ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கருப்பு அரிசி மாவு - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - 1,
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கருப்பு அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்து, நிழலில் காய வைத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் தேவையான தண்ணீரை வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உப்பு, வெங்காயம், 1 டீஸ்பூன் எண்ணெய், பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கருப்பு அரிசி மாவை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். சூடு ஆறியவுடன் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது எண்ணெய் விடவும். மாவை சிறு உருண்டையாக எடுத்து வட்ட வடிவமாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

சூப்பரான கருப்பு அரிசி ரொட்டி ரெடி.

காய்கறி குருமா, கார சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News