லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான சாமை தேங்காய்ப்பால் கஞ்சி

Published On 2017-11-16 05:37 GMT   |   Update On 2017-11-16 05:37 GMT
சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - கால் கப்,
உளுந்து - கால் கப்,
பாசிப் பருப்பு - 4 மேஜைக்கரண்டி,
கரைத்து வடிகட்டிய பனை வெல்லக் கரைசல் - ஒரு கப்,
முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்,
இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப்பால் - 2 கப்,
சுக்கு, ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி.



செய்முறை :

சாமை அரிசி, உளுந்து, பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல் பொடித்து கொள்ளவும்.

ரவை போல் பொடித்த சாமை அரிசி, உளுந்துடன் 2, 3-ம் தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து, குழைய வேகவிடவும்.

நன்றாக வெந்ததும் நன்கு மசித்து, முதல் தேங்காய்ப் பால், பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்து கொதி வரும போது இறக்கி பரிமாறவும்.  

சூடாகப் பருகினால் சுவையாக இருக்கும்.

சாமை தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News