லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம்

Published On 2017-10-07 03:36 GMT   |   Update On 2017-10-07 03:36 GMT
குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும். கேரட், பீன்ஸை சாதத்துடன் சேர்த்து வெரைட்டி ரைஸாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

தக்காளி விழுது (பியுரி) - 1/2 கப்
அரிசி - 3/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கேரட் - 2
பீன்ஸ் - 5டி கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி



செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பீன்ஸ், கேரட்டை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெயை விட்டு சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

அடுத்து அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

வதங்கியதும் தாக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட்டு ஊறவைத்த அரிசியையும் சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிபோட்டு 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News