லைஃப்ஸ்டைல்

சத்தான காலை டிபன் பருப்பு உருண்டை

Published On 2017-10-06 05:37 GMT   |   Update On 2017-10-06 05:37 GMT
பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று 4 வகையான பருப்பை வைத்து சத்தான உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - முக்கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பச்சரிசி - கால் கப்
சின்ன வெங்காயம்  - அரை கப்
பச்சை மிளகாய் -3
இஞ்சி - ஒரு துண்டு
தேங்காய் துருவல் - அரை கப்
கொத்தமல்லித் தழை - ஒரு பிடி
கறிவேப்பில - சிறிதளவு
எலுமிச்சம்பழச் சாறு -  2 ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசி, பருப்புகளை நன்றாக கழுவி ஒன்றாக சேர்த்து 4 மணி நேரம் ஊறவையுங்கள்.

அரிசி, பருப்பு நன்றாக ஊறியதும் அவற்றுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

உருட்டிய உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுங்கள்.

சூப்பரான சத்தான பருப்பு உருண்டை ரெடி.

காரச் சட்னியுடன் பரிமாறுங்கள். அல்லது இதை குழம்பிலும் போடலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News