லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி - பாசிப்பருப்பு சுண்டல்

Published On 2017-09-30 03:35 GMT   |   Update On 2017-09-30 03:35 GMT
ஜவ்வரிசியில் தோசை, பாயாசம் மட்டுமல்ல சூப்பரான சுண்டலும் செய்யலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு வைத்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - ஒரு கப்,
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் 3,
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



செய்முறை :

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் வேக வைத்த ஜவ்வரிசி கலவை, உப்பு, கேரட் துருவல், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

மேலே தேங்காய்த் துருவல் தூவி கிளறி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி சுண்டல்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News