லைஃப்ஸ்டைல்

முளைவிட்ட கோதுமைச் சுண்டல்

Published On 2017-09-25 05:24 GMT   |   Update On 2017-09-25 05:24 GMT
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் ஏதாவது பருப்பு வகைகளை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. இன்று முளைவிட்ட கோதுமையில் சுண்டல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முளைவிட்ட கோதுமை - 1 கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி (நறுக்கியது) - கால் கைப்பிடி
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - அரை சிட்டிகை
கேரட் துருவல் - 2 டேபிள் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.



செய்முறை :

சம்பா கோதுமையைக் கழுவி, தண்ணீரில் பத்து மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டுங்கள். அதை ஈரத்துணியில் சுற்றி முளைகட்டவிடுங்கள். கோதுமை முளைவிடக் கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஆகும்.

முளைகட்டிய கோதுமையை மூழ்கும் அளவு நீர்விட்டு குக்கரில் ஆறு முதல் ஏழு விசில் விட்டு, வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். (வடிகட்டிய நீரில் சிறிது உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை சிறிது, அரை டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ‘சூப்’போல் குடிக்கலாம்).

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு தாளித்து, பச்சை மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கோதுமையைப் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிவையுங்கள்.

கடைசியாக அதனுடன் கொத்தமல்லி, புதினா, துருவிய கேரட், தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறுங்கள்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News