லைஃப்ஸ்டைல்

சத்தான காலை உணவு சிவப்பு அவல் பிசறல்

Published On 2017-09-21 05:28 GMT   |   Update On 2017-09-21 05:28 GMT
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. காலையில் சாப்பிட சத்தான அவல் பிசறல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் - ஒரு கப்,
வெங்காயம் -   ஒன்று,
பச்சை மிளகாய் -  ஒன்று,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய்  - தேவைக்கு.

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு.



செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலை நன்றாக கழுவி அலசி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் அவலை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான அவல் பிசறல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News