லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு சத்தான வெஜிடபிள் பருப்பு கூட்டு

Published On 2017-09-06 05:21 GMT   |   Update On 2017-09-06 05:21 GMT
சப்பாத்தி, நாண், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த வெஜிடபிள் பருப்பு கூட்டு. இன்று இந்த கூட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேரட் - ஒன்று,
வெள்ளரிக்காய் - ஒன்று,
கத்திரிக்காய் - ஒன்று,
சௌசௌ - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
பீன்ஸ் - 6,
துவரம்பருப்பு - ஒரு கப்,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

கேரட், வெள்ளரிக்காய், கத்திரிக்காய், சௌசௌ, பீன்ஸ் ஆகிய காய்கறிகளை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து காய்கறி கலவையை கொதிக்க விடவும்.

அடுத்து வேக வைத்த காய்கறிக் கலவையுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்கறி கூட்டில் கொட்டி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான வெஜிடபிள் பருப்பு கூட்டு தயார்!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News