லைஃப்ஸ்டைல்

சிறுதானிய இனிப்பு பணியாரம்

Published On 2017-09-04 05:12 GMT   |   Update On 2017-09-04 05:12 GMT
சிறுதானிய வகைகளை பயன்படுத்தி சுவையான பலகாரங்களை செய்தும் ருசிக்கலாம். இன்று சிறுதானியங்களை வைத்து இனிப்பு பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகரிசி - அரை கப்
தினையரிசி - அரை கப்
உளுந்து - 3 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கடலை பருப்பு - கால் கப்
வெல்லத்தூள் - 1 கப்
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

சிறிது தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

அரிசி, உளுந்து மற்றும் பருப்புவகைகளை 2 மணி நேரம் நீரில் ஊற வைத்துவிட்டு மாவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மாவை இரண்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

புளித்த மாவில் கரைத்த வெல்லத்தை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை தூவி பணியார பதத்துக்கு கொண்டுவர வேண்டும்.

குழிபணியார சட்டியில் எண்ணெய் விட்டு மாவை பணியாரங்களாக சுட்டு எடுத்து சுவைக்கலாம்.

இதனை சிறுவர்கள் ருசித்து சாப்பிடுவார்கள்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News