சமையல்

சப்பாத்திக்கு சுவையான குடமிளகாய் தயிர் கிரேவி

Published On 2024-05-18 12:09 IST   |   Update On 2024-05-18 12:09:00 IST
  • செய்த உணவையே செய்து செய்து வெறுப்பா இருக்கா...
  • மிகவும் சுவையாகவும் வித்தியாகமாகவும் இருக்கும்.

இரவு நேரம் வந்தவுடன் என்ன உணவு சமைப்பது என்று வீட்டு பெண்களுக்கு ஒரு வித குழப்பம் ஏற்படும். செய்த உணவையே செய்து செய்து வெறுப்பா இருக்கா... அப்போ இதை டிரை பண்ணுங்க... மிகவும் சுவையாகவும் வித்தியாகமாகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தயிர் - 100 மிலி

சின்ன வெங்காயம் - 6

பூண்டு - 5 பல்

முந்திரி - 4

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 2

சிவப்பு, பச்சை குடமிளகாய் - 2

பட்டை, கிராம்பு, கடல் பாசி - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய் தூள் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் டிக்கா செய்வதற்கு வெட்டுவது போல் சதுர வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பூண்டு, முந்திரி, தக்காளி ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் வதக்கிய அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் 100 மிலி தயிர் சேர்ந்து அரைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம், குடமிளகாய் ஆகியவற்றை 10 நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலில் பட்டை, கிராம்பு, கடல் பாசி சேர்ந்து நன்கு வதக்கவும், அதனுடன் பொடியாக வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை போட்டு அதனை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் தயிர் சேர்ந்து அரைத்து வைத்திருந்த விழுதை இதனுடன் சேர்த்து நன்று வதக்கவும். அதனுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்ந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வதக்கி வைத்திருக்கும் குடமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியாக அடுப்பை அணைத்து கொத்தமல்லி சேர்க்கவும். இதோ சுவையான சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு ஏற்ற குடமிளகாய் தயிர் கிரேவி ரெடி. 

Tags:    

Similar News