லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் கேரட் கறி

Published On 2017-08-30 05:32 GMT   |   Update On 2017-08-30 05:32 GMT
பள்ளி செல்லும் குழந்தைக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கேரட் கறி செய்து சப்பாத்தியின் நடுவில் வைத்து ரோல் செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேரட் - 1/4 கிலோ,
வெங்காயம் - 1,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.



செய்முறை :

கேரட்டை நீளமாக நறுக்கி ஆவியில் லேசாக வேகவைத்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய், ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட்டை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

இறக்கும் நேரத்தில் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான கேரட் கறி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News