லைஃப்ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகளுக்கான வரகரிசி மிளகுச் சாதம்

Published On 2017-08-09 03:36 GMT   |   Update On 2017-08-09 03:36 GMT
கோதுமை, அரிசியை விட வரகு உடம்புக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு மிகப்பெரும் வரப்பிரசாதம். இன்று வரகரிசி மிளகுச் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

வரகரிசியையும். பாசிப்பருப்பையும் சேர்த்து கால் மணி நேரம் ஊறவைத்து அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி, பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய்யில் பாதி விட்டு மிளகு, சீரகம் போட்டு நன்றாக பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு வதக்குங்கள்.

முந்திரிப் பருப்பு பொன்னிறமானதும் முக்கால் லிட்டர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வரகரிசி, பருப்புக் கலவையை போட்டு 20 நிமிடங்கள் வேக விடுங்கள்.

இறக்குவதற்கு முன்பு, மீதமிருக்கும் நெய்யைவிட்டு கிளறி இறக்குங்கள்.

குக்கரில் வைத்தால் ஒரு விசில் விட்டு தீயை அணைத்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.

சூப்பரான சத்தான வரகரிசி மிளகுச் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News