லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு கோதுமை - கேரட் தோசை

Published On 2017-08-03 03:38 GMT   |   Update On 2017-08-03 03:38 GMT
குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் செய்து கொடுத்தால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். இன்று கோதுமை கேரட் தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்
துருவிய கேரட் - 3/4 கப்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை :

கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், சிறிது உப்பு சேர்த்து வதக்கி தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி தோசையை மூடி வைத்து சுடவும். ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.

சத்தான குழந்தைகளுக்கு கோதுமை - கேரட் தோசை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News