லைஃப்ஸ்டைல்

சத்தான முளைக்கட்டிய கேழ்வரகு வெங்காய தோசை

Published On 2017-07-03 03:19 GMT   |   Update On 2017-07-03 03:19 GMT
உடலுக்கு முழுமையான சத்துக்களை அள்ளித்தருவதில் முளைக்கட்டிய தானியத்துக்குத்தான் முதலிடம். இன்று முளைகட்டிய கேழ்வரகில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
வெங்காயம் - 2
உப்பு - சிறிதளவு
மிளகு தூள் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு



செய்முறை :

* பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேழ்வரகை நன்றாக சுத்தம் செய்து முளைகட்ட விடவும். முளைகட்டிய கேழ்வரகை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தோசை மாவு, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து , அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து, நன்றாக வதக்கவும்.

* வதக்கிய வெங்காயத்தை தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெல்லிய தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான முளைக்கட்டிய கேழ்வரகு வெங்காய தோசை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News