லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான சைடிஷ் பாலக் தால்

Published On 2017-06-24 05:21 GMT   |   Update On 2017-06-24 05:21 GMT
பாலக் / பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பாலக் தால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பற்கள்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* துவரம் பருப்புடன் தண்ணீர், சிறிது மஞ்சள், பூண்டு, எண்ணெய் சேர்த்து மசிய வேக வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* 2 நிமிஷம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி மசிய வெந்ததும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து கலந்து வேகவிடனும்.

* தண்ணீர் சேர்க்க வேண்டாம். கீரை வேகும்போது விடும் நீரே போதுமானதாக இருக்கும். கீரை நன்றாக வெந்தததும் வேகவைத்த பருப்பு தேவையான உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.

* கரண்டி அல்லது மத்து கொண்டு நல்லா மசித்து விட்டு கீரை வெந்து குழம்பு கொதிக்கும் போது தீயை அணைச்சுட்டு சூடான சாதத்துடன் பரிமாறவும்.

* சத்தான பாலக் தால் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News