லைஃப்ஸ்டைல்

ருசியான சத்தான மாம்பழ - அவகோடா சாலட்

Published On 2017-06-03 03:35 GMT   |   Update On 2017-06-03 03:35 GMT
குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் மாம்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எலுமிச்சை சாறு - 1
தேன்  - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
முட்டைக்கோஸ் - சிறிதளவு
வெங்காயம் - பாதி
சிகப்பு குடமிளகாய் - பாதி
அவகோடா - 1
பழுத்த மாம்பழத்துண்டுகள் - 2



செய்முறை :

* மாம்பழத்தை தோல் நீக்கி நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* வெங்காயம், குடமிளகாய், அவகோடாவை சதுரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

* ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பழத்தின் எலுமிச்சை சாறு, தேன், துருவிய இஞ்சி, ஆலிவ் ஆயில், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* ஒரு தட்டில் முட்டைக்கோஸ் இலை, வெங்காயம், சிகப்பு குடமிளகாய், மாம்பழத்துண்டுகள், அவகோடா ஒவ்வொன்றையும் லேயர் போல வைத்து அதன் மேலாக கலந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு, தேன், மிளகுத்தூள் சேர்ந்த கலவையை அதன் மேலாக ஊற்றி பரிமாறவும்.

* ருசியான மாம்பழ - அவகோடா சாலட் ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News