லைஃப்ஸ்டைல்

ஊட்டச்சத்து நிறைந்த கறிவேப்பிலை பொடி இட்லி

Published On 2017-05-22 05:16 GMT   |   Update On 2017-05-22 05:16 GMT
உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் கறிவேப்பிலை இட்லியை அனைவருமே காலை, இரவு வேளைகளில் சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு இது.
தேவையான பொருட்கள் :

இட்லிப் பொடி - 1 ஸ்பூன்,
கறிவேப்பிலைப் பொடி - 1 ஸ்பூன்,
சிறிய இட்லி - 20,
நல்லெண்ணெய், கறிவேப்பிலை - சிறிதளவு.



செய்முறை :

* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இட்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

* அடுத்து அதில் இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி மசாலாவுடன் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

* சூப்பரான சத்தான கறிவேப்பிலை இட்லி ரெடி.

* இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News