லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான காய்கறி பொங்கல்

Published On 2017-01-12 03:25 GMT   |   Update On 2017-01-12 03:25 GMT
பொங்கலில் காய்கறிகளை சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இன்று சுவையான காய்கறி பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப

தாளிக்க :

மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

* அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

* வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்த பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கிய பின் காய்கறிக்கலவையைச் சேருங்கள்.

*. அடுத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய்கள் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

* கமகம காய்கறிப்பொங்கல் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News