லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான வாழைப் பூ துவையல்

Published On 2016-11-26 06:46 GMT   |   Update On 2016-11-26 06:46 GMT
வாழைப் பூ வடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைப் பூ துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

வாழைப் பூ - 1
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1½ மேஜைக்கரண்டி
வத்தல் மிளகாய் - 3
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
புளி விழுது - ¼ தேக்கரண்டி
தேங்காய் - 2 மேஜைக்கரண்டி (துருவியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வாழைப் பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு நீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்,ம் வத்தல் மிளகாய் போட்டு தாளித்த பின் புளி விழுது சேர்த்து 3 நொடிகள் வதக்கவும்.

* பின்பு வேக வைத்த வாழைப் பூ சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறவும்

* அடுத்து அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆற வைக்கவும்.

* நன்றாக ஆறியதும் அதனை மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, சிறிது நீர் விட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* சுவையான சத்தான வாழைப் பூ துவையல் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News