பொது மருத்துவம்
உலக ஆஸ்துமா தினம்

இன்று உலக ஆஸ்துமா தினம்

Update: 2022-05-03 03:40 GMT
ஆஸ்துமா நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை (மே 3-ந் தேதி) ‘உலக ஆஸ்துமா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆஸ்துமா, வயது வரம்பின்றி அனைவருக்கும் ஏற்படும் வாழ்வியல் நோய் வகையைச் சார்ந்தது. இந்நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. வருமுன் காப்பது மற்றும் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற வழிமுறைகளே பலன் தரும்.
 
ஆஸ்துமா நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை (மே 3-ந் தேதி) ‘உலக ஆஸ்துமா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், இருமல், மார்பு இறுக்கம் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகள். ஆஸ்துமா பாதிப்பானது குளிர்காலத்தை விட, கோடைக்காலத்தில் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
கோடைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுபாடு, பராமரிப்பில்லாத மின்விசிறி மற்றும் குளிர்சாதன பயன்பாடு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், சீரற்ற தூக்கம், புகை போன்ற காரணங்களால் ஏற்படும் பூஞ்சை பாதிப்பு ஆஸ்துமாவை உண்டாக்கும்.

2022-ம் ஆண்டின் கருப்பொருள் ‘ஆஸ்துமா சிகிச்சைக்கான தடையை தகர்த்தல்'. இதன் அடிப்படையில், நுரையீரலின் சீரான மற்றும் தடையற்ற சுவாசம் மூலம், ஆஸ்துமா பாதிப்பை தடுக்க முடியும். நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள் மற்றும் மூச்சுப் பயிற்சியின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். தூய்மையான காற்று, ஆரோக்கியமான தலைமுறைக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுவோம்.
Tags:    

Similar News