நீரிழிவு நோய்க்கான காரணங்களை ஆராய்வதை விட வராமல் தடுப்பதும் வந்த பின் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதே முக்கிய தேவையாகும்.
இனிப்பு, கொழுப்புள்ள உணவு போன்றவற்றை குறைத்து, நார்ச்சத்துள்ள உணவுகள், புரத சத்துக்கள் பருப்பு வகைகள் கொண்ட உணவு பழக்கமும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் போன்ற உடலுக்கான பயிற்சியும், தியானம் பிராணாயாமம் போன்ற மனதிற்கான பயிற்சியும் செய்து வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அத்துடன் நீரிழிவிற்கான மருத்துவ சிகிச்சையையும் முறையாக எடுத்துக் கொண்டால் வேண்டிய அளவு இன்சுலின் சுரந்து நீரிழிவை வெகுவாக கட்டுப்படுத்தி விடலாம்.
நீரிழிவு நோய், ஒருவர் மனதளவில் ஆரோக்கியமின்றி இருந்தாலும் அதிகரிக்கும். எனவே அவருக்கு குடும்பத்தாரின் அன்பும் அரவணைப்பும் மிகவும் அவசியம். எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர் தனது வாழ்க்கை முறையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்தி, சரியான சிகிச்சையை எடுத்துக் கொண்டு, குடும்பத்தாரின் அரவணைப்புடன் இருந்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார் டாக்டர் எ. இராமச்சந்திரன்.