என் மலர்

  நீங்கள் தேடியது "Health Problem"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துரித உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  • அதிகமாக சர்க்கரையை பயன்படுத்துவதும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்.

  உடலில் உள்ள உள் உறுப்புகளுள் மூளையின் செயல்பாடு முக்கியமானது. மூளை ஆரோக்கியமான இருந்தால்தான் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படவும் முடியும். இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு தாமதமாக தூங்குவது, கடும் வேலைப்பளு, துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புகை பிடிக்கும் பழக்கமும் மூளைக்கு பங்கம் விளைவிக்கும். புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கலந்து மூளையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறும்.

  மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும்போது ரத்தம் உறைந்து பக்கவாத பாதிப்பு உருவாகிவிடும். அதிகமாக சர்க்கரையை பயன்படுத்துவதும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேர்ந்து மூளையையும் பாதிக்கும்.

  மன அழுத்தம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். தமனியின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் மூளைக்கு ஆபத்து நேரும். அதிகமாக சாப்பிடுவதால் உடல்பருமன் போன்ற மேலும் பல உடல்நல பாதிப்புகளும் உண்டாகும்.

  நீண்ட நேரம் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதன் மூலம் அறிவாற்றல் குறையும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் கெட்டியான போர்வையால் தலையை மூடிக்கொண்டு தூங்குவார்கள். அப்படி தூங்கும்போது சுவாசத்தில் கலக்கும் ஆக்சிஜனுக்கு இடையூறு ஏற்பட்டு மூளையின் இயக்கம் குறையும்.அது பல்வேறு விதமான உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
  • நாக்கை வைத்தே உடல் பிரச்சனைகளை கண்டு பிடித்து விடலாம்.

  அறுசுவைகயான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கும் நாக்கு பயன்படுகிறது. உண்ணும் உணவில் தன்மைக்கேற்ப நாக்கில் பாக்டீரியா, வைரஸ் ம்ற்றும் பூஞ்சை போன்ற தொற்று கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தடுக்க நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

  ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக விளங்கும் நாக்கை வைத்தே உடல் பிரச்சனைகளை கண்டு பிடித்து விடலாம்.

  நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்...

  * நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும்.

  * அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதை குறிக்கும்.

  * சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால் இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்க்கான அறிகுறியாகும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 குறைபாட்டின் காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம்.

  * நாக்கு நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதை உணர்த்தும்.

  * மஞ்சள் நிற நாக்கு வயிறு அல்லது கல்லீரலில் பிரச்சனை, மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறிகளை உணர்த்துகிறது.

  * நாக்கு வெள்ளை நிறத்தில் காட்சியளித்தால் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டும்.

  * சாம்பல் நிறத்தில் இருந்தால் செரிமானம் மற்றும் மூலநோய் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

  * நாக்கில் காப்பி நிறத்தில் பதிவு இருந்தால் நுரையீரல் பாதிப்பை குறிக்கும்.

  * நாக்கில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் இருந்தால் நாக்கின் உராய்வுத்தன்னை குறைவதையும், எரிச்சல் தன்மை இருந்தால பயன்படுத்தும் பற்பசை நாக்கில் அலர்ஜியை ஏற்படுத்துவதையும் உணர்த்தும்.

  நாக்கி சுத்தமாக பராமரிக்க..

  * காலை மாலை இருவேளையும் பற்களை சுத்தம் செய்வது போல் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.

  * வாரம் ஒருமுறை வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இது வாயில் உள்ள நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகுவதை தடுக்கும் குணம் கொண்டது.

  * அதிக சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

  * சாப்பிட்டு முடித்தவுடன தண்ணீர் ஊற்றி, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

  * தினமும் நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலனை தரும்.

  * அவ்வப்போது இளம் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாயை கொப்பளிக்கலாம்.

  * இவ்வழிமுறைகளை பின்பற்றினால் நாக்கின் ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்.
  • சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும்.

  நன்றாக தூங்கி, அடுத்த நாளை தொடங்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழும்போது வில்லன் போன்று தோன்றி பாடாய்ப்படுத்துகிறது கழுத்து வலி. அது அன்றைய முழுபொழுதையும் அவஸ்தையாக்கிவிடும். கழுத்து வலி வரும், போகும் என்றாலும் அதை சாதாரண விஷயமாக நினைத்து தள்ளிவிடவும் முடியாது.

  செய்யும் வேலையின் பாதிப்பு, காயங்கள், தசை-எலும்பின் ஆரோக்கிய குறைபாடு, முதுகெலும்பு டிஸ்க் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது. வாழ்வியல் முறை மற்றும் சிலவிதமான உடற்பயிற்சிகளால் ஓரளவு வரை கழுத்து வலியை கட்டுப்படுத்தலாம்.

  உட்கார்ந்த நிலையிலே அதிக நேரம் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும் இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். கழுத்தை லேசாக அசைத்து கழுத்து தசைகளை இலகுவாக்குங்கள்.

  எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள். நிமிர்ந்த நிலையில் இருக்க துணைபுரியும் குஷன் அல்லது தலையணையை அதற்காக பயன்படுத்துங்கள்.

  கம்ப்யூட்டரில் வேலைபார்க்கும்போது கண்களுக்கு நேராக ஸ்கிரீன் வரும்விதத்தில் மானிட்டரை அமைத்திருங்கள். கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்தினால், இடை இடையே கண்களுக்கும், கழுத்திற்கும் லேசான பயிற்சி கொடுங்கள்.

  தூங்கும்போது உயரம் குறைந்த தலையணையை பயன்படுத்துங்கள்.

  அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், தலையை ஒருபுறமாக சாய்த்துவைக்கும் நிலையை தவிர்த்திடுங்கள்.

  படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்.

  பஸ்சிலோ இதர வாகனங்களிலோ நீண்ட நேரம் பயணிக்கும்போது `நெக் காலர்' பயன்படுத்துங்கள்.

  வேலை பார்க்கும் நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தை கடக்கும்போதும் கழுத்தை நான்கு முறை வட்டமாக சுற்றுங்கள். தலையை குனிந்து தாடை நெஞ்சில்படும் விதத்தில் பத்து வினாடிகள் வையுங்கள்.

  இடது பக்க காதை இடது தோளில் சாயுங்கள். 10 வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, அதுபோல் வலது பக்க காதை வலது தோளில் சாய்த்து செய்யுங்கள்.

  செல்போனில் பேசி முடித்ததும் தலையை வலது, இடது புறமாக சில தடவை திருப்புங்கள்.

  தலையை மெதுவாக வட்டத்தில் சுற்றுங்கள்.

  வலியை கட்டுப்படுத்தும் வழிகள்:

  * கழுத்து வலிக்கும்போது அந்த இடத்தில் சுடுநீர் நிரப்பிய பேக்கைவைத்து ஒத்தடம் கொடுங்கள். வலி கட்டுப்படும்.

  * காட்டன் துணியை சுடுநீரில் முக்கிப் பிழிந்து கழுத்தை சுற்றி இலகுவாக கட்டிவைத்தாலும் வலி குறையும்.

  * நேராக பார்த்தபடி தலையை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி கொண்டு வாருங்கள்.

  * தலையின் பின்னால் இரு கைகளையும் கட்டியபடி தாடை நெஞ்சில் படும் அளவுக்கு குனியுங்கள்.

  * முடிந்த அளவு தலையை உயர்த்தியும், பின்பு தாழ்த்தியும் பத்து முறை செய்யுங்கள்.

  சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும். அதனால் எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதும் நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயர் போன்களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல.
  • நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும்.

  பாட்டுப் பிரியர்களுக்கு 'இயர் போன்' மகிழ்ச்சியான சாதனமாக தோன்றலாம். ஆனால் அது காதுகளுக்கு மிக ஆபத்தானது. 'இயர் போன்கள்' காதுக்குள்ளே புகுந்து இசையால் காதுகளை அடைத்துவிடுகிறது. இவை அதிக பயன்பாட்டிற்கு வந்தபிறகு, காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இரைச்சல் நேரடியாக செவிப்பறைகளை தாக்குவது தான்.

  பொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடையும் ஒலி. இரண்டாவது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்தும். 'இயர் போன்' இசை அந்த இரண்டாவது ஒலி வகையைச் சேர்ந்தது. அந்தச் சத்தத்தை கேட்க மனம் விரும்பலாம். ஆனால் காதுகள் ஏற்றுக்கொள்ளாது.

  நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும். இரைச்சல் 40 டெசிபல் அளவை தாண்டும்போது காதுகள் மெல்ல செவிட்டுத்தன்மையை அடைகிறது. தினமும் இயர் போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்கும். சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடும். இவைதான் காது கேளாமையின் அறிகுறிகள்.

  இயர் போன்களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல. அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுதான் வாழ்வின் சோகம். பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் குறையும். நினைவாற்றல் மங்கும். அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் இவை அத்தனையும் தொடர்ந்து வரும்.

  தகவல் தொடர்பு மையங்களான கால் சென்டர்களில் வேலை செய்பவர்கள் இயர் போன்களை காதில் மாட்டிக் கொண்டு இரவு பகலாக மற்றவர்கள் பேசுவதை கேட்டு பணி செய்தே ஆக வேண்டும். அவர்கள் தங்கள் காது விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நேஇரத்தில் சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம்.

  இன்று இயர் போனை உடலின் அங்கம்போல பயன்படுத்துபவர்கள் அநேகம். நாகரிகமாய் உடை அணிந்து கிளம்புபவர்கள்கூட உடையின் உள்ளே இயர்போனை இணைத்து அதை காதில் திணித்து பயணத்தை பாட்டுக் கேட்டபடி தொடர்கிறார்கள். அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்பும் இயர்போன் இசையை நிறுத்தாமல் அப்படியே சாலையை கடப்பது அவர்களை விபத்தில் சிக்க வைக்கிறது.

  வாழ்நாள் முழுவதும் நமக்கு கேள்வித்திறன் தேவை. அதை பாதியிலேயே தொலைத்து விட்டால் மீதி காலத்தை எப்படி கழிப்பது? இயர் போன் கேட்கும் பழக்கம் உடையவர்கள் காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக காது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி காது கேட்கும் சக்தியை பரிசோதனை செய்யுங்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விலங்குகளிடம் இருந்தே இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.
  • இந்நோய் 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

  குரங்கு அம்மை நோய் ஒருவித வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரசில் இரண்டு தனித்தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்கா நாடுகளிலும், 2-வது பிரிவு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் கண்டறிப்பட்டது.

  நோய் பரவுவது எப்படி?

  பொதுவாக விலங்குகளிடம் இருந்தே இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடுவதன் மூலமும், அதன் உடல் திரவங்கள் மூலமும் பரவுவதாக கூறப்படுகிறது.

  குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் இறைச்சியை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டாலும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

  அறிகுறிகள்

  குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். அதோடு தலைவலி, உடல் வலியுடன் முதுகு வலியும் இருக்கும். மேலும் உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.

  இந்நோய் பாதிப்பு ஏற்பட்டதும் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்னர் அவை கொப்புளங்களாக மாறும். 2 அல்லது 3 நாட்களில் இந்த கொப்புளங்கள் உதிர்ந்து விடும்.

  குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குள்ளாகி 7 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறி வெளிப்படும். இந்நோய் 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

  செய்யக்கூடாதவை என்ன?

  குரங்கு அம்மை நோய் பாதித்தவரின் படுக்கை உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் தொடக்கூடாது.

  பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

  பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடக்கூடாது.

  கைகளை எப்போதும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் போது பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

  முக கவசம் அணியவேண்டும்.

  உடலில் தோன்றும் தோல் வெடிப்புகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

  வாய்புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் மூலம் கொப்பளிக்க வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முறையான சிகிச்சை பெற்றால் இதுவும் குணப்படுத்தக்கூடிய நோய்தான்.
  • வலிப்பு ஏற்படுபவர்களுக்கு உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்.

  வலிப்பு நோய் அதிக அளவில் ஆபத்தைகொண்ட நோய் இல்லை. மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களில் இதுவும் ஒன்று. சர்க்கரை நோய் போன்று காலம் முழுக்க உடலோடு இந்த நோய் இருந்துகொண்டிருக்கும் என்றும் சொல்ல முடியாது. நரம்பியல் நோய் நிபுணர்கள் மூலம் முறையான சிகிச்சை பெற்றால் இதுவும் குணப்படுத்தக்கூடிய நோய்தான். சில சினிமாக்களில், வலிப்பு நோய் ஏற்பட்டு கையும் காலும் வெட்டிவெட்டி இழுப்பவர்களுக்கு இரும்பு சாவிக்கொத்தை கையில் கொடுத்ததும் வலிப்பு நின்றுவிடுவது போல் காட்சிகளை அமைத்திருப்பார்கள். விஞ்ஞானபூர்வமாக அது நிரூபிக்கப்படாத விஷயம். வலிப்பிற்கும் இரும்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  அது தொடர்பான கேள்வியும்- பதிலும்:

  வலிப்பு நோய் உருவாக என்ன காரணம்?

  நமது இதயம் துடிப்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல் நமது மூளை நரம்பு செல்களும் தகவல்களை அனுப்ப மின்தூண்டுகைகளை செய்துகொண்டிருக்கும். சிலருக்கு இந்த மின்தூண்டுகை செயல்பாடு அளவுக்கு அதிகமாக இருக்கும். நமது மூளையின் ஒவ்வொரு பகுதியும் உடலின் வெவ்வேறு பகுதிகளை கட்டுப்படுத்துகிறது. எந்த பகுதியில் மின்தூண்டுகை மிக அதிகமாக இருக்கிறதோ, அதன் கட்டுப்பாட்டிற்குரிய உறுப்புகளில் அதன் தாக்கம் அபரிமிதமாக தோன்றும். அப்படி தோன்றுவது உடலில் பரவி வலிப்பாக மாறும். அது கை, தோள், கால் போன்றவற்றை கட்டுப்படுத்தும் பகுதியில் உருவாகி உடலின் பல பகுதிகளில் பரவி, கை- கால்களில் வலிப்பாக வெளிப்படும்.

  இதன் பாதிப்பு எவ்வளவு நேரம் காணப்படும்?

  சில நிமிடங்களே அந்த வலிப்பு தொடரும். பின்பு அவரே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்.

  அந்த நபரால் தனக்கு வலிப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள முடியுமா?

  முடியும். அவரது மனநிலையில் இயல்புக்கு மாறான குழப்பம் ஏற்படும். பார்வை மங்கலாகும். காதுகேட்கும் திறன் குறைந்தது போலிருக்கும். பதற்றம் ஏற்பட்டு பேச்சில் தடுமாற்றம் தோன்றும். வியர்வை அதிகமாக வெளிப்படும். இந்த மாதிரியான அறிகுறிகளை உணரும்போது அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடவேண்டும்.

  வலிப்பு ஏற்பட்டவர்களுக்கு நாம் உடனடியாக என்ன மாதிரியான முதல் உதவியை செய்யவேண்டும்?

  வலிப்பு ஏற்படுபவர்களுக்கு உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். அது அப்படியே நுரையீரலுக்கு செல்வது உயிரிழப்பிற்கான காரணமாக அமைந்துவிடும். அதனால் உமிழ்நீர் உள்ளே போகாத அளவுக்கு அவரை ஒருக்களித்து படுக்கவைக்க வேண்டும். வலிப்பு ஏற்படும்போது அவரை மல்லாக்க படுக்கவைத்துவிடக்கூடாது. அவரது உடைகள் இறுக்கமாக இருந்தால் இலகுவாக்கி, காற்றோட்டமான சூழலை உருவாக்கவேண்டும். வலிப்பு ஏற்படுகிறவருக்கு உடல் வெட்டி வெட்டி இழுக்கும். அவரை அமுக்கிப்பிடித்து கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாது. அதே நேரத்தில் அவருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவேண்டும். அருகில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் கிடந்தால் அப்புறப்படுத்திவிடவேண்டும். அவரது கையில் இரும்பு, சாவி போன்ற எந்த பொருளையும் கொடுக்க முயற்சிக்கக்கூடாது.

  இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?

  மூளை நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். நோயின் தன்மையை கண்டறிய பரிசோதனைகளை நடத்துவார்கள். அதற்குரிய மருந்துகளை வழங்குவார்கள். எந்த இடத்தில் இருந்து வலிப்பு தொடங்குகிறது என்பதை கண்டறிந்து, அந்த திசுவை அகற்றும் நவீன ஆபரேஷனும் இதற்கு கைகொடுக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று.
  • நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

  சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பொட்டாசியம், சோடா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம்.

  எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. அதுபோல் நிறைய பேர் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். அப்படி சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பொட்டாசியம், சோடா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.

  அல்லது ஜீரணமாகுவதற்கு கடினமாக இருக்கும். ரத்தத்தை வடிகட்டவும், கழிவுப்பொருட்களை அகற்றவும் உதவும் சிறுநீரகங்கள் அந்த வகை உணவுகளை உட்கொள்வதற்கு கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும் வயது அதிகரிக்கும்போது சிறுநீரகங்கள் குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும். எனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் உணவில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுக் கட்டுப்பாடுகளை கவனிக்காவிட்டால் சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம்.

  பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உலர்த்துதல், உப்பிடுதல், வெப்பத்தில் சூடுபடுத்துதல் போன்ற செயல்முறைகள் மூலம் பதப்படுத்தப்பட்டிருக்கும். அதனால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் வெளியேறிவிடும்.

  பன்றி இறைச்சியை பதப்படுத்தி தயாரிக்கப்படும் பேக்கன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது கோழி இறைச்சியுடன் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் கலந்து தயார் செய்யப்படும் இறைச்சி, வகையான சாசேஜ் போன்றவற்றை சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட அந்த உணவுகளில் அதிக சோடியம் உள்ளன. இது தினசரி அனுமதிக்கப்பட்ட அளவுகளில் 60 முதல் 70 சதவீதம் அதிகமாகும். எனவே அத்தகைய உணவுகளை தினமும் உட்கொண்டால் சிறுநீரக செயல்பாடுகளை சிதைத்துவிடும்.

  அடர் நிற சோடாக்கள்: இப்போது சோடாக்கள் பல்வேறு வண்ணங்களிலும், சுவைகளிலும் வெளிவருகின்றன. பெரும்பாலும் குளிர்பானங்களில் அதிக அளவு பாஸ்பரஸ் கொண்ட அடர் நிற சோடாக்கள் கலக்கப்படுகின்றன. 350 மி.லி. கொண்ட பானங்களில் 90 முதல் 180 மி.கி வரை சோடாக்கள் சேர்க்கப்படுகின்றன. இது நீரிழிவு நோயாளிக்கு அனுமதிக்கப்படும் பாஸ்பரஸ் அளவை விட பல மடங்கு அதிகம். அடர் நிற சோடாக்கள் உணவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதய நோய்க்கு வித்திடக்கூடும். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

  பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்கள்: சிறுநீரக நோய், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக சர்க்கரை அல்லது பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது. அவற்றுள் அவகேடோ, ஆப்ரிகாட், கிவி, ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் இந்த பழங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய வேறு சில ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். திராட்சை, அன்னாசி, மாம்பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் சீரான அளவில் பொட்டாசியம் உள்ளடங்கி இருக்கும். அவற்றை உட்கொள்ளலாம்.

  உலர் பழங்கள்: சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்களை தவித்துவிடுவதும் நல்லது. ஏனெனில் இந்த பழங்களை உலர வைக்கும் செயல்முறையின்போது அதிலிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அவற்றினுள் சர்க்கரை, பொட்டாசியம் போன்ற தாதுக்கள்தான் அதிகம் உள்ளதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளி கள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை வேகமாக ஜீரணிக்கப்படுவது அவர் களின் உடல்நிலையை பாதிக்கலாம்.

  பழச்சாறுகள்: நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட பழச்சாறு பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை, அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்கின்றன. எனவே வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அதில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவது நல்லது. எனினும் அடிக்கடி பருகக்கூடாது. எப்போதாவது ருசிக்கலாம்.

  பச்சை இலை காய்கறிகள்: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பச்சை இலை காய்கறிகளில் பசலைக்கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை முக்கியமானவை. அவற்றுள் பொட்டாசியத்தின் அளவு சிறியதாக இருந்தாலும், அது பிரச்சினையை ஏற்படுத்தும்.மேலும் இந்த காய்கறிகளில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது நோய் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும். எனவே இந்த பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இப்போது செல்ல பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வில் அங்கமாக மாறியுள்ளது.
  • பறவைகளை முத்தமிடுதல், முகத்திற்கு அருகில் வைத்து கொஞ்சுதல் கூடாது.

  இப்போது செல்ல பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வில் அங்கமாக மாறியுள்ளது. பறவைகளின் குட்டி சிணுங்கல்கள் மற்றும் நடவடிக்கைகள் நம்மை வெகுவாக கவர்கின்றன.

  வீட்டில் செல்ல பறவைகளை வளர்க்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

  செல்ல பறவைகளின் வயிற்றில் சால்மோனெல்லா என்னும் நுண்ணுயிரிகள் உள்ளன. குறிப்பாக அவற்றின் எச்சத்தை தவறுதலாக மனிதன் உண்ணும் போதோ, உணவில், குடிநீரில் கலக்கும் போதோ டைபாய்டு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மனிதர்களில் குறிப்பாக குழந்தைகளுக்கு பேதி, உடல் வெப்பம் அதிகரிப்பது, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும்.

  கிளமைடோபைலா சிட்டாஸி நுண்ணுயிரியால் உண்டாகும் சுட்டகோஸிஸ் என்னும் நோய், கிளி, மக்காவ்(Macaw), காக்கடைல்(Cockatiel) போன்ற பறவைகள் மூலம் பரவும். செல்ல பறவைகளின் உலர்ந்த எச்சமானது, காற்றிலுள்ள தூசியில் கலந்து மனிதனுக்கு பரவுகிறது. இதனால் உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி மற்றும் வறண்டு இருமல் ஏற்படும்

  செல்ல பறவை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

  பறவைகளின் கூண்டு, உணவு பாத்திரம் மற்றும் எச்சத்தை கையாளும் போது கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும். கூண்டுகளை காற்றோட்டமுள்ள இடங்களில் வைக்க வேண்டும். புகை மிகுந்த மற்றும் உருவாகக்கூடிய சமையலறையில் வைக்கக்கூடாது.

  பறவைகளை முத்தமிடுதல், முகத்திற்கு அருகில் வைத்து கொஞ்சுதல் கூடாது. பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் நீரை அளிக்க வேண்டும். கூண்டில் உள்ள எச்சம் மற்றும் உண்ணாமல் விட்ட உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைக்காமல் உடனுக்குடன் அகற்றுதல் மிகவும் அவசியம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும்.
  • குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது.

  கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளுடன் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் குரங்கு காய்ச்சல் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய் பற்றிய விரிவான விவரங்களை காண்போம்.

  'மங்கி பாக்ஸ்' எனப்படும் இது ஒரு வகை வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. மனிதர்களுக்கு இடையேயும் பரவலாம்.

  மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக் காடுகள் மற்றும் அங்கு வாழும் விலங்குகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடியது. அந்த பகுதியில் இருந்து பிற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

  காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, முதுகுவலி, உடலில் ஸ்டெமினா (ஆற்றல்) குறைவது, நிண நீர் சுரப்பிகளில் வீக்கம், சருமத்தில் வெடிப்பு, காயம், கொப்புளம் ஏற்படுவது குரங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும். பின்பு புண்கள், கொப்புளங்கள் உருவாகும். அவை மஞ்சள் நிற திரவத்தால் சூழப்பட்டதாகவோ இருக்கலாம்.

  அந்த சமயத்தில் உடலில் புள்ளி, புள்ளியாக கொப்புளங்கள் நெருக்கமாக உருவாகிக்கொண்டிருக்கும். முகம், உள்ளங்கை, கால்களில் சொறி உணர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் நான்கு வாரங்கள் கூட நீடிக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது அவசியமானது.

  பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்து விடும். பச்சிளம் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் கொண்டவர்கள் முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க நேரிடும். குரங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் சரும நோய்த்தொற்றுகள், நிமோனியா, கண்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஆகியவை பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். குரங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், கண்காணிப்பும் குறைவாக இருப்பதும் இறப்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.

  குரங்கு காய்ச்சல் அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள், காய்ச்சல் பாதிப்பு ஆளானவர்கள் (இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பவர்கள் நோய்வாய்ப்படக்கூடும். குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் உடலில் ஏற்படும் புண்களில் இருந்து வழியும் சீழ், ரத்தம் போன்றவை மூலம் நோய்த்தொற்று பரவக்கூடும்.

  அவர்கள் பயன்படுத்தும் உடைகள், படுக்கை அறை, துண்டுகள், உண்ணும் பாத்திரங்கள், உணவுகள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் பரவக்கூடும். நோய் பாதிப்புக்குள்ளான நபரின் வாயில் இருக்கும் புண்கள் கூட தொற்று நோயை பரப்பலாம். அதாவது குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. அதனால் தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களுடன் நெருங்கி பழகுபவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாவார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் நஞ்சுக்கொடி மூலம் கருவில் வளரும் குழந்தைக்கும் பரவக்கூடும். குழந்தையை பெற்றெடுத்த பிறகு சரும தொடர்பு மூலமும் பரவும்.

  1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்டதால், இந்த நோய் மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது 1970-ல் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.
  • சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறட்டையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

  குறட்டை, தூக்கக்கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். இது தூக்க சுழற்சியையும் தொந்தரவு செய்யக்கூடியது. தூங்கும்போது, கழுத்து தசைகள் இலகுவாகும். அப்போது மூக்கு, தொண்டை பாதை குறுகியதாக மாறும். அதனால் காற்று நுரையீரலுக்குள் செல்வது சிரமமாகும். மேலும் திசுக்கள் அதிர்வுக்குள்ளாகும். குறட்டை விடும்போதுதான் இந்த பிரச்சினைகள் உண்டாகும். குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.

  சோயா: குறட்டை பிரச்சினை இருப்பவர்கள் பால் பொருட்களை உட்கொள்வது நல்லதல்ல. பசுவின் பால், பாலாடைக்கட்டி போன்றவை கபத்தை அதிகரிக்கும். இதனால் இரவில் குறட்டை பிரச்சினையும் அதிகமாகும். பால் பொருட்களுக்கு மாற்றாக சோயா பால் உள்ளிட்ட பிற சோயா பொருட்களை உட்கொள்ளலாம். அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு குறட்டையையும் குறைக்கும்.

  தண்ணீர்: தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது சளியை போக்கும். மார்புக்கும் இதமளிக்கும். சளி உருவாகுவதை தடுக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பருகினால் மார்புக்கு இதமளித்து குறட்டை பிரச்சினையில் இருந்து விடுபடவும் உதவும்.

  தூக்கம்: போதுமான நேரம் தூங்குவதும் குறட்டையை தவிர்க்க உதவும். உடலும், உள்ளமும் உற்சாகமாக இல்லாவிட்டால் தொண்டை, நாக்கு தசைகள் இறுக்கமடைந்துவிடக்கூடும். அதனாலும் குறட்டை உருவாகிவிடும். தினமும் 7 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதில் சிக்கல் இருந்தால் குறட்டை பிரச்சினையும் தலைதூக்கிவிடும்.

  பாதாம்: மெலடோனின் நிறைந்த உணவுகள் குறட்டையை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மெலடோனின் என்பது அடிப்படையில் ஒரு ஹார்மோனாகும். பாதாம், கிவி, செர்ரி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் இந்த ஹார்மோன் நிறைந்திருக்கிறது. அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது குறட்டையில் இருந்து விடுபட உதவும்.

  நாசி ஸ்பிரே: நாசி ஸ்பிரேக்கள் பயன்படுத்துவதும் குறட்டையை கட்டுப்படுத்த உதவும். தூங்குவதற்கு முன்பு தலையை நன்றாக சாய்த்துக்கொண்டு மூக்கு வழியாக ஸ்பிரேயை தெளிக்கலாம்.

  பூண்டு: சூடான உணவுகள் குறட்டையை குறைக்க உதவும். பூண்டுவை வறுத்து சூடாக சாப்பிடுவது சளியை போக்கவும், அது உருவாகுவதைத் தடுக்கவும் உதவும். பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. பூண்டின் ருசி நாக்குக்கும் விருந்து படைக்கும். அதன் வாச னையும் நிறைய பேருக்கு பிடிக்கும்.

  சாமந்தி டீ: சாமந்தி டீயில் ஆல்பா பிசபோலோல் மற்றும் டைமசோலின் ஆகிய அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. இவை குறட் டையை குறைக்க உதவும். காலையிலோ அல்லது மாலையிலோ சூடாக சாமந்தி டீ பருகலாம்.

  மிளகுக்கீரை எண்ணெய்: இந்த எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நாசியின் உள் புறத்தில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவும். நாசி அடைப்பை திறந்து குறட்டையை நிறுத்த உதவும்.

  இஞ்சி: இஞ்சி மற்றும் தேன் கலந்த டீ பல நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது. காலையிலும், இரவிலும் இந்த டீயை பருகுவது குறட்டை பிரச்சினை குறைவதற்கு உதவும். இரவில் நல்ல தூக்கமும் வரும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தொண்டைக்கு இதமளிக்கும். குறட்டையையும் போக்கும்.

  நெய்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நெய் குறட்டையை கட்டுப்படுத்தவும் உதவும். அதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

  மேலும் சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறட்டையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

  * உடல் பருமன் கொண்டிருந்தால் அதனை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

  * புகைப்பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் அதனையும் கைவிட வேண்டும்.

  * தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாக்கு, தொண்டைகளுக்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதும் பலன் தரும்.

  * இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் நீராவி பிடிப்பதும் நல்லது. பயன்படுத்தும் தலையணையை அடிக்கடி மாற்றுவதும் அவசியம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
  கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வராத நிலையில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. உடல் நடுக்கம், காய்ச்சல், பசியின்மை, கடுமையான உடல்வலி, தலைவலி உள்ளிட்டவை டெங்குவின் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

  பப்பாளி இலை சாறு: பிளேட்லெட் எனப்படும் ரத்தத்தட்டுகள், சிறிய செல்கள் வடிவிலானவை. உடலில் சிறிய காயம் ஏற்பட்டால் உடனே ரத்தத்தை உறைய வைப்பதற்கு இவை அவசியம் தேவை. அதிகப்படியான ரத்த இழப்பை தடுப்பதில் பிளேட்லெட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பப்பாளி இலை சாறு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. அதனால் பப்பாளி இலைகளை சாறு பிழிந்து பருகி வரலாம்.

  வைட்டமின் சி: இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்ற வைட்டமின் சி நிரம்பிய உணவு பொருட்களை சாப்பிட்டுவது நல்லது.

  துத்தநாகம்: இதுவும் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும். முழு தானியங்கள், பால் பொருட்கள், செர்ரி பழங்கள், வேகவைத்த பீன்ஸ், கொண்டைக்கடலை, முந்திரி, பாதாம், சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் துத்தநாகம் அதிகம் நிரம்பியுள்ளது. அவற்றை சாப்பிடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஜிங்க் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

  போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12: இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவை.

  இரும்பு: இரும்புச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். நோயெதிர்ப்பு செல்கள் பெருக்கம் அடைவதற்கு இரும்பு அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகலாம். மது அருந்தக்கூடாது. எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், காபின், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo