லைஃப்ஸ்டைல்
உள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்க்கிறதே ஏன்?

உள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்க்கிறதே ஏன்?

Published On 2019-08-23 07:34 GMT   |   Update On 2019-08-23 07:34 GMT
உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. உள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. நமது உடலில் இருந்து தினசரி சுமார் 1 லிட்டர் அளவிலான வியர்வை வெளியேறுகிறது.

மக்கள் தொகையில் சராசரியாக 1 சதவீதம் பேருக்கு அதிகப்படியாக வியர்வை வெளியேறும் பாதிப்பு உள்ளது. அதிகப்படியான வெப்பம் மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சியின்போது பலருக்கும் கூடுதல் வியர்வை வெளியேறலாம். ஆனால் இவை அல்லாமல் சாதாரண நேரத்திலும் அதிகமாக வியர்வை வெளியேறிக்கொண்டிருப்பது “ஹைபர்ஹைட்ராசிஸ்” பாதிப்பு என கூறப்படுகிறது.

முகம், கைகள், அக்குள் ஆகிய இடங்களில் அதிகமாக வியர்வை வடிவது ஆரம்பகட்ட பாதிப்பாகும். காரசாரமான உணவுகளை சாப்பிடுதல், வெப்பம் அதிகரித்தல், வேறு நோய்களின் தாக்கம், கவலையின் காரணமாக இதுபோன்ற பாதிப்பு ஏற்படலாம். வளர் இளம் பருவத்தில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இதேபோல உடல் முழுவதும் வியர்வை அதிகமாக வெளியேறும் பாதிப்பு மற்றொரு வகையாகும். நீரிழிவு, உடல்பருமன், மன அழுத்தம் கொண்டவர்களிடமும் இதுபோன்ற வியர்வை வெளியேற்றம் நிகழக்கூடும். இத்தகைய பாதிப்புக்கு சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.

Tags:    

Similar News