search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியர்வை"

    • ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.
    • காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

    குளிர் காலத்தில் சளி பிரச்சனையை எதிர்கொள்வது அனைவருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. கோடை காலத்தில் அதிக அளவில் ஏசியை பயன்படுத்துவது, குளிர் பானம் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் சளி தொந்தரவு குளிர் காலத்தில் ஏற்படுவது போலவே தான் இருக்கும் மற்றும் தொற்று ஏற்பட்ட 5-7 நாட்களுக்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    சளி, ஒவ்வாமை, தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரிப்பு, இருமல், வியர்வை மற்றும் காய்ச்சல் போன்றவை கோடை கால ஜலதோஷத்தின் போது ஏற்படும் பல்வேறு அறிகுறிகளாகும்.

    குளிர்காலத்தைப் போலல்லாமல் கோடைக்காலத்தில் மக்கள் அதிகமாக வெளியில் இருப்பதாலும், வறண்ட காற்று வைரசுக்கு சரியான இனப்பெருக்க தளத்தை வழங்குவதாலும் கோடைக்காலத்தில் ஜலதோஷ பிரச்சனைகள் ஏற்படலாம்.

    வெயில் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், தும்மல், இருமல், சளி போன்றவை பருவகாலங்களின் தட்பவெப்ப மாற்றங்களினால் மட்டும் அதிகம் ஏற்படுவதில்லை. ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.

    வெயிலோ, மழையோ நீங்கள் தினமும் அதிகம் அலைய வேண்டி இருப்பதால் உடலில் இருந்து வியர்வை கூடுதலாக வெளியேற வாய்ப்பு அதிகம். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கும் போது குளிர்ச்சியான பானங்களைக் குடித்துவிடுவோம். இது தான் வைரஸ் கிருமி உடலுக்குள் புகுந்து ஜலதோஷம், தும்மல், இருமல், சளியை உண்டாக்கிவிடுகிறது.

    இதுபோக, காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தி சளியை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் வேறு குளிர்காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் வேறு.

    வெயிலில் அதிகம் அலைபவர்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை கையோடு எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை வெளியில் தண்ணீர் குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மற்ற நாட்களை விட வெயில் காலங்களில் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். வெயிலில் அதிகம் அலையாதீர்கள், ஜலதோஷம், தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகில் நிற்காதள். நீங்கள் அணிந்து செல்லும் உடைகளை வீட்டுக்கு வந்தவுடன் துவைக்கப் போட்டுவிட்டு நன்றாக குளித்து விடுங்கள்.

    தேவையான அளவு நன்றாக ஓய்வு எடுங்கள். வெளியில் சுற்றும்போது கைகளால் முகத்தைத் தொடாதீர்கள், துடைக்காதீர்கள். கிருமிகள் கையில் இருந்து முகத்துக்கு மிகச் சுலபமாக போய்விடும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சளி அதிகமாக வெளிவர வில்லையென்றால் நன்றாக தினமும் ஆவி பிடியுங்கள். ஃபிரிட்ஜில் உள்ள உணவுப்பொருட்களை அதிகம் உபயோகிக்காதீர்கள்.

    ×