search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "sneezing"

  • நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
  • அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சினைகள் நேர்கின்றன.

  நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உள்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.

  சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும்.இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது. அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சனைகள் நேர்கின்றன.

  ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனை தினமும் குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும். நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

  கொதிக்கும் நீரில் அடிக்கடி ஆவி பிடித்தாலும் சளி கரைந்து வெளியேறும். தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கியமாக வாய்ப்பு உள்ளது.

  • ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
  • சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது.

  நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.

  சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது.

  எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

  சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.

   சைனஸ் நோய்க்கான சித்தமருத்துவம்

  சளி வந்தால் செய்ய வேண்டியவை:

  * சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும். கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.

  சளியுடன் வரும் இருமலுக்கு:

  * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.

  * அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச்சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.

  சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு:

  * திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதை பொடி செய்து, நுண்ணிய பொடியாக சலித்து வைத்துக் கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும் போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும்.

  * தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

  மூக்கில் ரத்தம் வடிதலுக்கு:

  * தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.

  பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.

  கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர தும்மல் விலகும்.

  மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு:

  * நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும்.

  * படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.

  சைனஸ் என்ற பீனிச நோய்க்கு:

  * சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம். குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.

  * அதேபோல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.

  * கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை , இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.

  * தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு, அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர். கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்து சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.

  • சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு.
  • மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.

  சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.

  உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.

  மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.

  மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.

  நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய்.

  காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக் காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது.

  முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.

  அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில்

  இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சினையாகும்.

  இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவைசிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது.

  மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம்.

  மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது.

  மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும்.

  ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சினைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.

  • ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.
  • காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

  குளிர் காலத்தில் சளி பிரச்சனையை எதிர்கொள்வது அனைவருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. கோடை காலத்தில் அதிக அளவில் ஏசியை பயன்படுத்துவது, குளிர் பானம் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் சளி தொந்தரவு குளிர் காலத்தில் ஏற்படுவது போலவே தான் இருக்கும் மற்றும் தொற்று ஏற்பட்ட 5-7 நாட்களுக்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

  சளி, ஒவ்வாமை, தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரிப்பு, இருமல், வியர்வை மற்றும் காய்ச்சல் போன்றவை கோடை கால ஜலதோஷத்தின் போது ஏற்படும் பல்வேறு அறிகுறிகளாகும்.

  குளிர்காலத்தைப் போலல்லாமல் கோடைக்காலத்தில் மக்கள் அதிகமாக வெளியில் இருப்பதாலும், வறண்ட காற்று வைரசுக்கு சரியான இனப்பெருக்க தளத்தை வழங்குவதாலும் கோடைக்காலத்தில் ஜலதோஷ பிரச்சனைகள் ஏற்படலாம்.

  வெயில் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், தும்மல், இருமல், சளி போன்றவை பருவகாலங்களின் தட்பவெப்ப மாற்றங்களினால் மட்டும் அதிகம் ஏற்படுவதில்லை. ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.

  வெயிலோ, மழையோ நீங்கள் தினமும் அதிகம் அலைய வேண்டி இருப்பதால் உடலில் இருந்து வியர்வை கூடுதலாக வெளியேற வாய்ப்பு அதிகம். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கும் போது குளிர்ச்சியான பானங்களைக் குடித்துவிடுவோம். இது தான் வைரஸ் கிருமி உடலுக்குள் புகுந்து ஜலதோஷம், தும்மல், இருமல், சளியை உண்டாக்கிவிடுகிறது.

  இதுபோக, காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தி சளியை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் வேறு குளிர்காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் வேறு.

  வெயிலில் அதிகம் அலைபவர்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை கையோடு எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை வெளியில் தண்ணீர் குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மற்ற நாட்களை விட வெயில் காலங்களில் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். வெயிலில் அதிகம் அலையாதீர்கள், ஜலதோஷம், தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகில் நிற்காதள். நீங்கள் அணிந்து செல்லும் உடைகளை வீட்டுக்கு வந்தவுடன் துவைக்கப் போட்டுவிட்டு நன்றாக குளித்து விடுங்கள்.

  தேவையான அளவு நன்றாக ஓய்வு எடுங்கள். வெளியில் சுற்றும்போது கைகளால் முகத்தைத் தொடாதீர்கள், துடைக்காதீர்கள். கிருமிகள் கையில் இருந்து முகத்துக்கு மிகச் சுலபமாக போய்விடும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சளி அதிகமாக வெளிவர வில்லையென்றால் நன்றாக தினமும் ஆவி பிடியுங்கள். ஃபிரிட்ஜில் உள்ள உணவுப்பொருட்களை அதிகம் உபயோகிக்காதீர்கள்.

  யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். தும்மல் வருவதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  தும்மல் என்றால் என்ன? அது எப்பொழுது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். நன்றாக யோசித்துப்பாருங்கள். ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுக்கள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும்.

  அல்லது காலையில் சாலையில் நடக்கும்பொழுது யாராவது

  * ரோட்டை பெருக்கிக்கொண்டிருந்தால் அதில் வரும்
  * தூசியின் மூலமாக தும்மல் வரும்.
  * சூடாக சாப்பிடும்பொழுது தும்மல் வரும்.
  * காரமாக சாப்பிடும்பொழுது வரும்.
  * அல்லது வீட்டில்' அடுப்பில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும்பொழுது வரும்.
  * காரம் மூக்கின் வழியாக நுழையும்பொழுது தும்மல் வரும்.

  மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும்பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து
  எனவே அதை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்ற ஹிடமைன் என்ற சுரப்பியிடம் அந்த வேலையை கொடுப்பார்.

  தும்மல் சுரப்பி நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்வார். இங்கே நாற்பது தூசுக்கள் உள்ளன. எனவே ஒரு நாலு தும்மல் மூலமாக அந்த தூசுகளை வெளியேற்றலாம் என்று முடிவு செய்து தும்மலுக்கு தேவையான சத்தியை உடலிலிருந்து பெற்று காற்று தேவையான அளவு எடுத்து தும்மல் வரும்பொழுது அதில் நீர்த்துளிகள் வரும்.

  எனவே உடலில் உள்ள தும்மலுக்கு தேவையான நீரை உறிஞ்சி நமக்கு தெரியாமல் நம்மையும் மீறி நான்கு முறை காற்றுடன் தண்ணீரைக்கொண்டு அந்த நாற்பது தூசிகளையும் வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கம் என்ற வேலைதான் தும்மல்.  தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மை மீறி திடீரென வருகிறது. எனவே தும்மல் என்பது ஒரு நோய் கிடையாது. தும்மல் நம் உடல் பார்க்கும் வைத்தியம். ஆனால் நாம் தும்மல் வரும்பொழுது அதை அடக்க நினைக்கிறோம்.

  சிலர் அலுவலகத்திலோ மீட்டிங்கிலோ இருக்கும்பொழுது தும்மல் வராமல் அடக்குகிறோம். இப்படி தும்மல் வரும்பொழுது அடக்கினால் அதற்கு பெயர் தான் நோய். சிலர் தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தும்மல் வரும்பொழுது தைலம் பயன்படுத்தினால் என்ன நடக்கும்.

  தைலத்தின் வாசம் உடலுக்குள் புகுந்து தும்மல் சுரப்பியை வேலை செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடும். நமது உடலிலுள்ள கழிவை வெளியே வீசும் மருத்துவம் செய்யும் தும்மல் சுரப்பியை வேலை செய்ய வேண்டாம் என்று தடுப்பது நமது உடலுக்கு நாம் செடீநுயும் துரோகமாகும்.

  இப்படி தைலத்தின் வாசம் இருக்கும்வரை நமக்கு தும்மல் வராது. நாம் நினைத்துக்கொள்கிறோம் தும்மலை குணப்படுத்திவிட்டோம் என்று. கண்டிப்பாக கிடையாது.

  நீங்கள் கழிவை வெளியேற்றும் ஒரு செயலை நிறுத்திவிட்டீர்கள். சுமார் ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு ஊந்த தைலத்தின் வாசம் ஊருக்கும்வரை தும்மல் சுரப்பி சுரக்காது. ஏற்கனவே நாற்பது தூசுகள் உள்ளே சென்ற நிலையில் தும்மல் சுரப்பி சுரக்கா விட்டால் இந்த ஐந்து மணி நேரத்தில் நாலாயிரம் தூசுகள் நம் நுரையீரலுக்குள் புகுந்துவிடும்.

  எனவே தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு எந்த வைத்தியமும் செய்யக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் உள்ள காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். அல்லது முகத்தில் துணியை கட்டிக்கொள்ளவேண்டும்.

  இப்படி காற்றை சுத்தம் செய்வதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டுமே தவிர தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக் கூடாது. எனவே, தும்மல் என்பது ஒரு நோயே கிடையாது. தும்மல் வந்தால் நன்றாக தும்ம வேண்டும் என்பது மட்டுமே மருத்துவம் ஆகும். தும்மலுக்கு ஒரே சிகிச்சை தும்ம வேண்டும். இதைத் தவிர எதைச் செய்தாலும் அது உடலுக்கு கெடுதல் உண்டு செய்யும்.
  ×