search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Care"

    கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்களே பலரும் விரும்புகின்றனர். தேங்காய் பாலும் உடலின் உஷ்ணத்தை வெகுவாக குறைக்கக் கூடியது.
    பசும் பாலுடன் ஒப்பிடும் போது தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த உணர்வைக் கொடுக்காது, லைட்டாக இருக்கும். தேங்காய் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள். தேங்காய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் உள்ளது. இது தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக் கூடியது. குழந்தை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் ஸ்மூத்தி செய்யும் போது பசும் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியுடன் சியா விதைகள் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடிக்கலாம். உடல் எடை குறைப்புக்கான சரியான பானமாக இருக்கும்.

    1. வெயிலினால் ஏற்படும் வெப்பத் தாக்கம், இதய பிரச்னைகள், சோர்வு, தசை வலி அல்லது கோளாறுகள் மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

    2. உடலில் உள்ள எலெக்ட் ரோலைட்ஸ் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

    3. எளிதில் செரிக்கக் கூடியது. லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களும் இதை அருந்தலாம்.

    4. தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. பொட்டாசியம் மிகவும் அதிகம்.

    5. தேங்காய் பாலில் இருக்கு இரும்புச் சத்து இரத்த சோகை நீங்க உதவுகிறது.

    6. தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து பசியை வெகுநேரம் தாங்கக்கூடியது. உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.

    7. தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

    8. உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து வற்றாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    9. தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்து தலை முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.

    25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.
    25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.

    25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம். அவை

    * பாதாம் பருப்பு: அன்றாடம் 5-6 பாதாம் பருப்புகளை உண்பது சிறந்த கண் பார்வைக்கு உதவும். கண் பாதிப்புகளைத் தவிர்க்கும்.

    * பீட்ரூட் இலை    
    * பச்சை, சிகப்பு, மஞ்சள் குடைமிளகாய்.
    * பரோகலி விதை
    * கேரட்
    * சியா விதைகள்
    * ஃப்ளாக் விதை  
    * கிரீன் டீ
    * கீரை    
    * மாம்பழம்
    * சிகப்பு பூசணி
    * சர்க்கரைவள்ளி கிழங்கு    
    * தக்காளி இவை அனைத்தும் கண் பார்வை குறைபாட்டினை சீர் செய்யும்.
    யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். தும்மல் வருவதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தும்மல் என்றால் என்ன? அது எப்பொழுது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். நன்றாக யோசித்துப்பாருங்கள். ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுக்கள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும்.

    அல்லது காலையில் சாலையில் நடக்கும்பொழுது யாராவது

    * ரோட்டை பெருக்கிக்கொண்டிருந்தால் அதில் வரும்
    * தூசியின் மூலமாக தும்மல் வரும்.
    * சூடாக சாப்பிடும்பொழுது தும்மல் வரும்.
    * காரமாக சாப்பிடும்பொழுது வரும்.
    * அல்லது வீட்டில்' அடுப்பில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும்பொழுது வரும்.
    * காரம் மூக்கின் வழியாக நுழையும்பொழுது தும்மல் வரும்.

    மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும்பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து
    எனவே அதை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்ற ஹிடமைன் என்ற சுரப்பியிடம் அந்த வேலையை கொடுப்பார்.

    தும்மல் சுரப்பி நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்வார். இங்கே நாற்பது தூசுக்கள் உள்ளன. எனவே ஒரு நாலு தும்மல் மூலமாக அந்த தூசுகளை வெளியேற்றலாம் என்று முடிவு செய்து தும்மலுக்கு தேவையான சத்தியை உடலிலிருந்து பெற்று காற்று தேவையான அளவு எடுத்து தும்மல் வரும்பொழுது அதில் நீர்த்துளிகள் வரும்.

    எனவே உடலில் உள்ள தும்மலுக்கு தேவையான நீரை உறிஞ்சி நமக்கு தெரியாமல் நம்மையும் மீறி நான்கு முறை காற்றுடன் தண்ணீரைக்கொண்டு அந்த நாற்பது தூசிகளையும் வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கம் என்ற வேலைதான் தும்மல்.



    தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மை மீறி திடீரென வருகிறது. எனவே தும்மல் என்பது ஒரு நோய் கிடையாது. தும்மல் நம் உடல் பார்க்கும் வைத்தியம். ஆனால் நாம் தும்மல் வரும்பொழுது அதை அடக்க நினைக்கிறோம்.

    சிலர் அலுவலகத்திலோ மீட்டிங்கிலோ இருக்கும்பொழுது தும்மல் வராமல் அடக்குகிறோம். இப்படி தும்மல் வரும்பொழுது அடக்கினால் அதற்கு பெயர் தான் நோய். சிலர் தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தும்மல் வரும்பொழுது தைலம் பயன்படுத்தினால் என்ன நடக்கும்.

    தைலத்தின் வாசம் உடலுக்குள் புகுந்து தும்மல் சுரப்பியை வேலை செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடும். நமது உடலிலுள்ள கழிவை வெளியே வீசும் மருத்துவம் செய்யும் தும்மல் சுரப்பியை வேலை செய்ய வேண்டாம் என்று தடுப்பது நமது உடலுக்கு நாம் செடீநுயும் துரோகமாகும்.

    இப்படி தைலத்தின் வாசம் இருக்கும்வரை நமக்கு தும்மல் வராது. நாம் நினைத்துக்கொள்கிறோம் தும்மலை குணப்படுத்திவிட்டோம் என்று. கண்டிப்பாக கிடையாது.

    நீங்கள் கழிவை வெளியேற்றும் ஒரு செயலை நிறுத்திவிட்டீர்கள். சுமார் ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு ஊந்த தைலத்தின் வாசம் ஊருக்கும்வரை தும்மல் சுரப்பி சுரக்காது. ஏற்கனவே நாற்பது தூசுகள் உள்ளே சென்ற நிலையில் தும்மல் சுரப்பி சுரக்கா விட்டால் இந்த ஐந்து மணி நேரத்தில் நாலாயிரம் தூசுகள் நம் நுரையீரலுக்குள் புகுந்துவிடும்.

    எனவே தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு எந்த வைத்தியமும் செய்யக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் உள்ள காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். அல்லது முகத்தில் துணியை கட்டிக்கொள்ளவேண்டும்.

    இப்படி காற்றை சுத்தம் செய்வதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டுமே தவிர தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக் கூடாது. எனவே, தும்மல் என்பது ஒரு நோயே கிடையாது. தும்மல் வந்தால் நன்றாக தும்ம வேண்டும் என்பது மட்டுமே மருத்துவம் ஆகும். தும்மலுக்கு ஒரே சிகிச்சை தும்ம வேண்டும். இதைத் தவிர எதைச் செய்தாலும் அது உடலுக்கு கெடுதல் உண்டு செய்யும்.
    ×