லைஃப்ஸ்டைல்

பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் திராட்சை

Published On 2017-11-04 03:21 GMT   |   Update On 2017-11-04 03:21 GMT
பச்சையாக உள்ள திராட்சையும் சரி, உலர்ந்த திராட்சையும் சரி, ஒரே மாதிரி மருத்துவ குணம் வாய்ந்தவை. தித்திப்புடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கக்கூடியது திராட்சை.
பச்சையாக உள்ள திராட்சையும் சரி, உலர்ந்த திராட்சையும் சரி, ஒரே மாதிரி மருத்துவ குணம் வாய்ந்தவை. தித்திப்புடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கக்கூடியது திராட்சை.

அவை பற்றி...

தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தரக்கூடியது திராட்சை.

தினமும் காலை எழுந்தவுடன் திராட்சைச் சாறு பருகிவந்தால், நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றின் தொல்லை தீரும்.

திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்துச் சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதயச் செயல்பாடு சிறப்பாக அமையும்.

குடல்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் திராட்சைப் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் நலம் பெறலாம்.



சிறிது உலர்திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் கட்டுப்படும்.

அசைவ உணவு உண்ணாதவர்கள் அவ்வப்போது திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக்கூடிய சத்துகளைப் பெறலாம்.

மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சைச் சாறு பருகுவது நல்ல பலன் கொடுக்கும்.

குழந்தைகளுக்கும் ஆரோக்கிய அனுகூலம் அளிக்கக்கூடியதாகும் திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றுக்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி திராட்சைச் சாறு பிழிந்து கொடுத்தால் நல்ல பலன் கிட்டும்.
Tags:    

Similar News