லைஃப்ஸ்டைல்

ஞாபகமறதி வியாதியை தடுக்கும் வழிகள்

Published On 2017-08-16 02:57 GMT   |   Update On 2017-08-16 02:57 GMT
வாழ்நாள் முழுக்க மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலம் மூளை வலு அடையும் என்றும், அது முதுமையில் டிமென்சியா நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
‘டிமென்சியா’ எனப்படும் ஞாபகமறதி நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், தமது வாழ்நாளில் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டிருந்தால் இந்த நோய் ஏற்படாமலே தடுத்திருக்க முடியும் என்று ஒரு சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.

‘தி லான்செட்’ இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாழ்நாள் முழுக்க மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலம் மூளை வலு அடையும் என்றும், அது முதுமையில் டிமென்சியா நோய் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் புதிய ஆய்வின் முடிவு கூறுகிறது.

டிமென்சியாவுக்கான முக்கிய காரணம் முதுமை என்றாலும், அதற்கான 35 சதவீத காரணிகளை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் கூறும் குறிப்பிட்ட ஆய்வு, அதற்கு ஒன்பது விஷயங்களை கவனிக்க வேண்டும் என்கிறது.

கல்லாமை, காதுகேளாமை, புகைபிடித்தல், மனஅழுத்தம், சமூகத் தனிமை, உடல் உழைப்பின்றி இருப்பது, அதிகரித்த ரத்த அழுத்தம், உடல்பருமன் மற்றும் நீரிழிவுநோய் ஆகியவைதான் அந்த ஒன்பது காரணிகள்.

மூன்றில் இரண்டு பங்கு டிமென்சியா நோயாளிகள் அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நோய் முற்றுவதைத் தடுக்க இதுவரை மருந்தில்லை.

‘டிமென்சியா’ நோய் குறித்து நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக டிமென்சியா மாறும் என்று அல்சைமர்ஸ் சங்கம் எச்சரிக்கிறது.

இந்த ஆபத்தை மனிதர்கள் அனைவருமே உணர்ந்து அதற்கேற்பத் தம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகளை நல்லவிதமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
Tags:    

Similar News