லைஃப்ஸ்டைல்

‘ரத்தசோகை’யை தடுக்கும் வழிமுறைகள்

Published On 2017-07-28 02:52 GMT   |   Update On 2017-07-28 02:53 GMT
ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும், ஹீமோகுளோபினின் செயல்பாடுகளும் குறைவதால் நம் உடலில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவது தடைபட்டு ரத்தசோகை ஏற்படுகிறது.
18 முதல் 45 வயதுக்குள் உள்ள பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இது அதிகம் பாதிக்கிறது.

அடிக்கடி சோர்வாக இருப்பது போன்ற உணர்வு, பசியின்மை, எந்தச் செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல், அடிக்கடி உறக்கம் வருவது போன்ற உணர்வு, கண்களின் கீழ்ப்பகுதி, நாக்கு, விரல் மற்றும் நகங்களில் வெளுத்த நிறம் காணப்படுவது ஆகியவை ரத்தசோகையின் அறிகுறிகளாகும்.

சரி, ரத்தசோகை ஏற்படாமல் எப்படித் தடுக்கலாம்?

தினசரி சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் அனைத்துச் சத்துகளும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அந்த உணவுகளில் முக்கியமாக முட்டை, பேரீச்சை, பால், இறைச்சி, கீரை வகைகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்தசோகை பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அதற்கான தகுந்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது மிகவும் முக்கியம்.
Tags:    

Similar News