லைஃப்ஸ்டைல்

மனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்

Published On 2017-05-06 08:54 GMT   |   Update On 2017-05-06 08:54 GMT
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் கூட மன அழுத்தத்திற்கு வித்திடும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மனநலத்தை காப்பதற்கு வழிகோலும்.
இயந்திரத்தனமான இயக்கத்துடன் வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பெரும்பாலானோரை எளிதில் மன அழுத்தம் ஆட்கொண்டு விடுகிறது. பணிச்சூழல், குடும்ப சூழலுக்கு மத்தியில் மன நிம்மதியை தேடி உழல்பவர்கள் அதிகம். சில சமயங்களில் அவர்கள் சாப்பிடும் உணவுகள் கூட மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமாகிவிடுகிறது. அதிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் கூட மன அழுத்தத்திற்கு வித்திடும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மனநலத்தை காப்பதற்கு வழிகோலும். அத்தகைய உணவு பதார்த்தங்கள் பற்றி பார்ப்போம்.

* மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக நடக்க முட்டைக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதில் வைட்டபின் பி, அயோடின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், புரதம் போன்றவை உள்ளடங்கி இருக்கின்றன. அவை மூளையின் இயக்கத்திற்கு நலம் சேர்க்கும்.

* வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. மேலும் டிரிப்டோபன் என்ற பொருளும் இருக்கிறது. அது சந்தோஷமான ஹார்மோனான செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

* ஸ்ட்ராபெர்ரி பழத்திலும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அத்துடன் வைட்டமின் சியும் கலந்திருக்கிறது. இவை நரம்புகளை தூண்டுவதற்கு துணை புரியும். மனநிலையையும் மேம்படுத்த உதவும்.



* செர்ரி பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது ரத்த அழுத்தம் சீராக நடைபெற வழிவகுக்கும். மூளையில் ஏற்படும் அழற்சியை குறைத்து மனநிலை சீராக இருக்க தூண்டும்.

* தேங்காய், மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் பொருளாகும். இதில் நல்ல மனநிலையை உண்டாக்கும் விசேஷ கொழுப்பும் உள்ளடங்கி இருக் கிறது.

* கருமை நிற சாக்லேட் மனநிலையை மேம்படுத்த உதவும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மையும் அதற்கு உண்டு. எனினும் அதில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் மேம்படுத்துவதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. மூளையில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது. அதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதை தடுத்து மூளையையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க துணைபுரியும்.
Tags:    

Similar News