வழிபாடு

ஆரணி வெங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2022-07-21 04:24 GMT   |   Update On 2022-07-21 04:24 GMT
  • 29-ந்தேதி திருப்பதியில் இருந்து உற்சவர் சாமிகள் கொண்டு வரப்படுகின்றன.
  • 30-ந்தேதி சுப்ரபாத சேவை உற்சவங்கள் காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்கு பட்ட ஏ.சி.எஸ் நகரில் அமைந்துள்ள ஏ.சி.எஸ் கல்வி குழுமத்தில் கடந்த மாதம் 17ந் தேதி வெங்கடா ஜலபதி கோவில் புதியதாக கட்டபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற 29-ந் தேதி திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து உற்சவர் சாமிகள் 7ரத வாகனத்தில் கொண்டு வரப்படுகின்றன.

30-ந் தேதி காலையில் வெங்கடஜலபதி பெருமாள் கோவிலில் சுப்ரபாத சேவை தோமாலை உற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி விளையாட்டு அரங்கில்70 சிவாச்சாரியர்களை கொண்டு திருப்பதி திருமலை சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளன.

அடுத்த மாதம் ஆகஸ்ட்-4ந் தேதி வரையில் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் லலிதா லட்சுமி சண்முகம் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிர்வாக அலுவலர் தர்மாரெட்டி தமிழ்நாடு புதுச்சேரி கோவில் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சேகரரெட்டி தமிழகத்தை சேர்ந்த கோவில் கமிட்டி உறுப்பினர்கள் எம்.எல்.ஏ நந்தகுமார் சீனிவாசன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

Tags:    

Similar News