வழிபாடு

திருமலையில் புரசைவாரி தோட்ட உற்சவம்: மலையப்பசாமி ஊர்வலம்

Published On 2022-08-02 04:25 GMT   |   Update On 2022-08-02 04:25 GMT
  • பொகடா மரத்துக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது.
  • திருமலையில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவம் நடந்தது.

தமிழகத்தில் பாண்டிய நாட்டில் வாழ்ந்த திருமால் பக்தரான விஷ்ணு சித்தருக்கு சொந்தமான துளசி வனத்தில் பூதேவியின் அம்சமாக தமிழ் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் ஆண்டாள் என்ற கோதாதேவி அவதரித்தார். அவருடைய அவதார தினத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி நேற்று திருமலையில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவம் நடந்தது. கோவிலில் மாலை சகஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி திருமலையில் உள்ள புரசைவாரி தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டார்.

அங்கு, உற்சவர்களுக்கு நிவேதனம் முடிந்ததும் மேள தாளம் மற்றும் மங்கள இசை முழங்க புரசைவாரி தோட்டத்தில் இருந்து ஊர்வலமாகக் கோவிலுக்குப் புறப்பட்டனர். போகும் வழியில் உள்ள பொகடா (மகிழ மரம்) மரத்துக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து, சிறப்பு அர்ச்சனை செய்தனர். சடாரிக்கு அபிஷேகம் செய்து, பொகடா மரத்துக்கும் சடாரிக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பொகடா மரத்துக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

அப்போது பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், "அனந்தாழ்வார் வைபவம்" என்ற நூலை வெளியிட்டனர்.

Tags:    

Similar News