வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கோவிலில் புஷ்ப யாக அங்குரார்ப்பணம்

Published On 2023-03-18 04:08 GMT   |   Update On 2023-03-18 04:08 GMT
  • இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
  • மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் சாஸ்திர பூர்வமாக புண்யாவதனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகமும் நடக்கிறது. இதனால் இன்று கோவிலில் நடக்க இருந்த நித்ய கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News