என் மலர்

    நீங்கள் தேடியது "Srinivasa Mangapuram Kalyana Venkateswara Swamy Temple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வந்தது.

    3-வது நாளான நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திர மூர்த்தி, ருக்மணி, சத்தியபாமா, ஸ்ரீகிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அத்துடன் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், தோமாலை சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து ஆஸ்தானம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வசந்தோற்சவம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • நாளை தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    முதல் 2 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மற்றும் 3-வதுநாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் மற்றும் ருக்மனி, சத்தியபாமா சமேத கிருஷ்ணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று முன்தினம் மாலை புஷ்ப யாகம் நடந்தது.

    அதையொட்டி அன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    மதியம் 2 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி என 12 வகையான மலர்களும், 6 வகையான இலைகளும் சேர்த்து மொத்தம் 3½ டன் எடையிலான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புஷ்ப யாகத்துக்கு பயன் படுத்தப்பட்ட மலர்களை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், காணிக்கையாளர்களும் வழங்கினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
    • மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் சாஸ்திர பூர்வமாக புண்யாவதனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகமும் நடக்கிறது. இதனால் இன்று கோவிலில் நடக்க இருந்த நித்ய கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது.
    • பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-வது நாளான நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதையடுத்து புஷ்கரணி எதிரில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணவெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியார் உற்சவர்களுக்கு விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், முக சுத்தம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் செய்தார். மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தாா்.

    அப்போது புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், விஷ்ணுசூக்தம், வேத மந்திரங்கள், பஞ்சசூக்த மந்திரங்கள் வேத பாராயணர்களால் ஓதப்பட்டது. சாமிக்கும், தாயார்களுக்கும் பல வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    திருமஞ்சனம் முடிந்ததும் காலை 9.40 மணியளவில் கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் 3 முறை நீரில் மூழ்கியெடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

    அப்போது கோவில் அதிகாரிகள், பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து புஷ்கரணியில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரம்ேமாற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இதோடு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

    பானு சுவாமி, வம்சி சுவாமி ஆகியோர் போட்டுவில் சுவையான பிரசாதங்களை தயாரித்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர். கருட சேவை மற்றும் தேரோட்டத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். பக்தர்களும் தினமும் 100 ஸ்ரீவாரி சேவா சங்கத்தினர் சேவை செய்தனர். சுமார் 1500 பக்தர்கள் மருத்துவ வசதிகளை பெற்றனர்.

    பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. மலர் அலங்காரத்துக்காக 50 தோட்ட ஊழியர்கள் இரவும் பகலும் பாடுபட்டனர். அவர்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த பூக்களை அலங்காரத்துக்கு பயன்படுத்தினர்.

    கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் 75 துப்புரவுப் பணியாளர்களும், முக்கியமான நாட்களில் கூடுதலாக 25 பணியாளர்களும் கோவில் வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று சூரிய, சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், வெங்கடாத்திரி ராமுடுவாக எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மகா விஷ்ணு, ராமர், அனுமன் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. வசந்த காலத்தில் நடத்தப்படும் கைங்கர்யங்களால் சாமிகள் சோர்வடைவார்கள் என்பதால், அதில் இருந்து விடுபடும் நிகழ்ச்சியாக வசந்தோற்சவம் நடத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்னர் 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந் தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
    • பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை பல்லக்கு உற்சவம் நடந்தது.

    அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'ஜெகன்மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவருடன் திருச்சி வாகனத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பல்லக்கு முன் கஜராஜர் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

    முன்னதாக சீனிவாசமங்காபுரத்தில் நடந்த கருடசேவையில் எழுந்தருளிய உற்சவா் கல்யாணவெங்கடேஸ்வரருக்கு திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த மாலைகள் திருப்பதி கோசாலை, தாடிதோப்பு, பெருமாள்பள்ளம் வழியாக சீனிவாசமங்காபுரத்தை அடைந்தன. அந்த மாலையில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டன.

    மாலை ஊர்வலத்தில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கருடசேவை நடந்தது. உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருடசேவையில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.
    • சுவாமிக்கும், தாயாருக்கும் ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    திருமலையில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, கல்யாண மண்டபத்தில் சுவாமி மற்றும் தாயாருக்கு காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பாலாஜி ரங்காச்சாரியார் தலைமையில் திருமஞ்சனம் நடைபெற்றது.

    முன்னதாக விஷ்வக் சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. தொடர்ந்து தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.

    பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. சுவாமிக்கும், தாயாருக்கும் ரோஜா, சம்பங்கி போன்ற ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும்.
    • கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் கல்ப விருட்ச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் நடன கலைஞர்களின் கோலாட்டம் நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை சர்வ பூபாலை வாகன வீதிஉலா நடந்தது. வீதிஉலாவில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    5-வது நாளான இன்று (புதன்கிழமை) இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி கருடவாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இதற்காக கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    மதியம் 2 மணிக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தன நிர்வாகக் கட்டிடத்தில் இருந்து திருமலை லட்சுமி ஹாரம் கருடசேவையில் சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். காலை 7 மணிக்கு கோவிந்தராஜசுவாமி கோவிலில் இருந்து ஆண்டாள் அம்மனுக்கு மாலை அணிவித்தல் ஊர்வலம் தொடங்குகிறது. பகல் 11 மணிக்கு நகர வீதிகள் வழியாக சீனிவாசமங்காபுரத்தை ஊர்வலம் சென்றடையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo