வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்... பஞ்சாங்கம்...

Published On 2022-08-05 01:38 GMT   |   Update On 2022-08-05 01:38 GMT
  • மதுரை மீனாட்சியம்மன் முளைக் கொட்டு உற்சவாரம்பம்.
  • இன்று வரலட்சுமியை வழிபட வேண்டிய தினம் ஆகும்.

இன்று வரலட்சுமி வழிபாடு

இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமியை வழிபட வேண்டிய தினம் ஆகும். ஒரு சமயம் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் வாசலில் நின்ற சித்திரநேமி என்பவனை அழைத்து யார் ஜெயிப்பார்கள் என்று கேட்டார். அதற்கு சித்தரநேமி நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என்றார்.

இதனால் கோபம் அடைந்த பார்வதி தேவி அவனை நோயாளி ஆகும்படி சபித்தாள். பிறகு சிவபெருமான் வேண்டு கோளை ஏற்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பதிவிரதைகள் செய்யும் பூஜைகள் செய்தால் நோய் குணமாகும் என்று பார்வதி தேவி அருளினாள். இதை ஏற்று சித்தரநேமி குணமடைந்தான். அதுபோல சாருமதி என்ற பெண்ணும் இந்த வழிபாட்டை கடைபிடித்து 16 பேறுகளையும் பெற்றாள்.

இன்று வரலட்சுமி பூஜையை முறைப்படி செய்தால் இளம்பெண்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். தாமரை பூவை சமர்ப்பித்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சுக்ரவார உற்சவம்.

வரலட்சுமி விரதம். படவேடு ரேணுகாம்பாள் முதல் சுக்ரவார உற்சவம், தொடர்ந்து 7 வாரமும் நடைபெறும். சேலம் செவ்வாப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் பவனி. மதுரை மீனாட்சியம்மன் முளைக் கொட்டு உற்சவாரம்பம். இருக்கன்குடி மாரியம்மன் உற்சவாரம்பம் சங்கரன்கோவில் கோமதியம் மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்க பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு

இன்று பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆடி-20 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : அஷ்டமி இரவு 11.58 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம் : சுவாதி பிற்பகல் 3.41 மணி வரை பிறகு விசாகம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - ஆர்வம்

கடகம் - சுகம்

சிம்மம் - வெற்றி

கன்னி - மேன்மை

துலாம் - ஆக்கம்

விருச்சிகம் - உழைப்பு

தனுசு - சாதனை

மகரம் - நம்பிக்கை

கும்பம் - யோகம்

மீனம் - நிம்மதி

Tags:    

Similar News